/indian-express-tamil/media/media_files/Xfv3feSna1N5pp7SjdRN.jpg)
ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு ரோகித் - கோலிக்கு இடம் அளிக்கப்பட்டது.
Hardik Pandya | Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. கடந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரை தொடரில் இருந்து பாதியிலே வெளியேறும் நிலை வந்தது.
தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கப்படுவாரா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு ரோகித் - கோலிக்கு இடம் அளிக்க அணி நிர்வாகம் நினைத்தது. இதேபோல், ஐ.பி.எல் தொடரில் தங்களது திறனை நிர்ணயிக்கும் வீரர்களை டி20 அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் அரைசதம் விளாசி சிவம் துபே 60, 63 ரன்களை எடுத்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், பவுலிங்கில் தலா ஒரு விக்கெட் என 2 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். இதனால், அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை திட்டத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சிறப்பான ஆட்டம் குறித்து கேப்டன் ரோகித் மெச்சியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தில் சிக்கிவிடும் நிலையில், அவரது இடத்தில் களமாட துபே-வை ரோகித் வளர்த்தெடுக்கும் திட்டத்தில் உள்ளார். அதனால், இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் கவனமாக விளையாடும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் அவரது கேப்டன் பதவி கனவும் பகல் கனவாக வாய்ப்புள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ப்பு பிள்ளையான சிவம் துபே சர்வதேச டி20 அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவராலும் அதிகம் கவனிக்கப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.