Advertisment

இன்ஸ்டா-வில் அடித்துக் கொண்ட துபே - தீபக் சஹர்… அட இதுதான் காரணமா?

இன்ஸ்டா பதிவில் துபே - தீபக் சஹர் மாறி மாறி அடித்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shivam Dube vs Deepak Chahar: fight over All-Time CSK XI Tamil News

'நாம் இருவரும் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரேயொரு ஓவர் வீசி ஒரு போட்டியில் விளையாடலாம்.' என்று தீபக் சஹர் கூறியுள்ளார்.

Shivam Dube vs Deepak Chahar Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற கேப்டனாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி திகழ்ந்து வருகிறார். அவர் ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீண்ட காலமாக அவர் வழிநடத்தி வரும் நிலையில், அவரது தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

Advertisment

இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அத்துடன் 10 முறை ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐ.பி.எல் பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்தது.

துபே-வின் ஆல்-டைம் ப்ளேயிங் லெவன்

இந்நிலையில், சென்னை அணியின் ஆல்-டைம் ப்ளேயிங் லெவனை சிவம் துபே தேர்வு செய்தார். அதில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வழக்கம் போல் தோனியையே துபேவும் தேர்வு செய்துள்ளார்.

Advertisment
Advertisement
publive-image

தொடக்க வீரர்களாக மேத்யூ ஹெய்டன் - மைக்கேல் ஹசியையும், அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா, அவருக்குப் பிறகு அம்பாதி ராயுடுவை டாப் பேட்டிங் ஆடராக தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ உள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஆல்பி மார்கல் எல் பாலாஜி ஆகியோரும், சுழலுக்கு ஹர்பஜன் சிங்-கும் உள்ளார். இவர்களுடன் கடைசி வீரராக தன்னை தானே சிவம் துபே தேர்வு செய்துள்ளார்.

மோதல்

publive-image

இந்நிலையில், இந்தப் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்த சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளரான தீபக் சஹர், அடுத்த ஆண்டு நீங்கள் பவுலராக விளையாடினால், எனக்கு அணியில் எப்படி இடம் கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாம் இருவரும் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரேயொரு ஓவர் வீசி ஒரு போட்டியில் விளையாடலாம்.

அந்தப் போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் அணியில் இடம்பிடிக்கலாம் என்றும் கமெண்ட் செய்தார். இதற்கு பதிலளித்த சிவம் துபே, உனக்காக நான் என் இடத்தை காலியாக வைத்திருக்கிறேன் என்று பதிலளித்தார். சென்னை இரண்டு வீரர்கள் மாறி மாறி கலாய்த்து கொண்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Chennai Super Kings Csk Deepak Chahar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment