Shoaib Akhtar Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உள்ளது. இப்போட்டி வருகிற 28 ஆம் தேதி நடக்கிறது. வழக்கம் போல், இப்போட்டியைப் பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதேபோல், முன்னாள் வீரர்களும் இத்தொடர் குறித்து பேசி வருகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பும், ரசிகர்களின் ஹார்ட்-பீட் எகிறும். அது இந்த முறையும் தொடரும் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனல் "ஃப்ரெனிமீஸ்" என்ற தலைப்பில் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் மொஹாலியில் 1999ல் சவுரவ் கங்குலிக்கு வீசிய விஷமமான பந்து வீச்சைப் பற்றி பேசுகின்றனர்.
அதில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பேசும்போது, போட்டிக்கு முன் நடந்த பாகிஸ்தான் அணி சந்திப்பில், இந்திய பேட்டர்களின் தலை மற்றும் விலா எலும்பை குறிவைக்கும்படி அவரிடம் குறிப்பாக கேட்கப்பட்டதாகவும், பட்டியலில் உள்ள பெயர்களில் கங்குலியும் இருந்ததாகவும், ஸ்வாஷ்பக்லிங் பேட்டரின் விலா எலும்புகளை குறிவைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
“ எங்கள் அணி சந்திப்பில், கங்குலிக்கு அவரது விலா எலும்பில் குறிவைக்க முடிவு செய்தோம். நான் எப்படி பேட்மேன்களை அடிக்க முயற்சிப்பேன் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, 'நான் அவர்களை ஆட்டமிழக்க செய்ய வேண்டாமா?’ என்று கேட்டிருந்தேன், ஆனால் அவர்கள், ‘இல்லை. உங்களது பந்துவீச்சில் வேகம் அதிகம். நீங்கள் பேட்டர்களை அடிக்க முயற்சி செய்யுங்கள், நாங்கள் விக்கெட்டுகளை பார்த்துக்கொள்வோம் என்று சொன்னார்கள்,” என்று உண்மையைக் கூறி உடைத்துள்ளார் அக்தர்.
1999 ஆம் ஆண்டு நடந்த போட்டியில், அக்தரின் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சால் விலா எலும்புகளில் தாக்கப்பட்டதால், கங்குலி களத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. மேலும் அவரால் அதிரடியாக விளையாட முடியாமலும் போனது.
பிற்காலத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலி தான் பந்துவீசிய துணிச்சலான பேட்ஸ்மேன்களுள் ஒருவர் என்று அக்தர் எப்போதும் பேசி வருகிறார். ஏனெனில், அக்தரின் பந்துவீச்சிற்கு கங்குலி ஒருபோதும் பின்வாங்கவில்லை மற்றும் ஷார்ட் பந்திற்கு எதிராக ஒரு வரம்பு இருந்தபோதிலும் அவருக்கு எதிராக அவரால் ரன்கள் எடுக்க முடிந்தது.
“எனது வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள பயப்படுவதாகவும், என்னை எதிர்கொள்ள பயப்படுவதாகவும் மக்கள் கூறுவார்கள். அதெல்லாம் குப்பை என்று நினைக்கிறேன். கங்குலி தான் நான் வீசிய துணிச்சலான பேட்ஸ்மேன், புதிய பந்தில் என்னை எதிர்கொள்ளக்கூடிய ஒரே தொடக்க வீரர் அவர்தான்” என்று அக்தர் 2020 ஆம் ஆண்டில் வழங்கியிருந்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.