Shoaib Malik: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரைப் போல், வங்கதேசத்தில் பி.பி.எல் (பங்களாதேஷ் பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான பார்ச்சூன் பாரிஷால் அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக் விளையாடி வருகிறார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்த இவர் சனா ஜாவேத் என்கிற பாகிஸ்தான் நடிகையை சில நாட்களுக்கு திருணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பி.பி.எல் தொடருக்கான பார்ச்சூன் பாரிஷால் அணியுடனான ஷோயப் மாலிக்கின் ஒப்பந்தம் நிறுத்தப்படுத்தாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையில், "இந்த சீசனின் பி.பி.எல்-லில் சோயப் மாலிக் தொடர்ந்து பங்கேற்க மாட்டார்" என்று கூறியுள்ளது.
ஷோயப் மாலிக்கின் ஒப்பந்தம் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை உள்ள நிலையில், அவரது ஒப்பந்தம் நிறுத்தப்படுத்தாக அறிவிப்பு வெளியான பரபரப்பாக பேசப்பட்டது. அவரது ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்களாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் ஒன்று ஒழுங்கு நடவடிக்கை சிக்கல்கள் என்றும், இரண்டாவது குல்னா டைகர்ஸுக்கு எதிராக அவர் வீசிய நோ-பால்கள் என்றும் கூறப்படுகிறது.
ஷோயப் மாலிக் நடப்பு சீசனில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் புதிதாக திருமணமான தனது மனைவி சனா ஜாவேத்துடன் நேரத்தை செலவிட விடுப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவர் துபாய்க்கு சென்று பி.பி.எல் தொடரின் சில்ஹெட் போட்டிக்கு முன் அவர் அணிக்கு திரும்ப வேண்டும். ஆனால் துபாயில் தரையிறங்கிய பிறகு, வாக்குறுதியளித்தபடி தன்னால் சரியான நேரத்தில் அணியில் சேர முடியாது என்றும், பிப்ரவரி 3 ஆம் தேதி சில்ஹெட் போட்டிக்குப் பிறகு தான் தன்னால் அணியில் சேர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஷோயப் மாலிக்கின் இந்த பதில்களால் அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது. அவரது ஒப்பந்தம் பிப்ரவரி 10 வரை மட்டுமே என்பதால் அமைதி காத்துள்ளது. ஆனால், ஷோயப் மாலிக் ஒரு போட்டியில் மூன்று நோ-பால்களை வீசியது சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. இது மேலும் சர்ச்சைக்குள்ளதனால் அவரது ஒப்பந்தத்தை நிறுத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குல்னாவுக்கு எதிரான ஆட்டத்தின் நான்காவது ஓவரில், மாலிக் மூன்று நோ-பால்களை வீசினார். டி20-களில் ஃபிங்கர் ஸ்பின்னர் நோ-பால் வீசுவது அரியது என்றாலும், அவர் ஒரே ஓவரில் 3 நோ-பால்களை வீசியதால் பெரும் சந்தேகம் எழுந்தது. அதிலும் அவர் வீசிய 3வது நோ-பால் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்பட ஸ்கிரீன் ஷாட்கள் வைரலானது.
ஷோயப் மாலிக் வீசிய அந்த ஓவரில் இருந்து மட்டும் 18 ரன்கள் வந்தது. இறுதியில் பரிஷால் அணி போட்டியில் தோல்வியுற்றது. இது பரிஷால் அணி நிர்வாகம் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே 3 நோ-பால்களை வீசியதால் கேப்டன் தமிம் இக்பால் ஷோயப் மாலிக்கிற்கு அடுத்த ஓவரை கொடுக்கவில்லை. அதனால், அடுத்த போட்டியில் அவர் பேட்டராக மட்டுமே விளையாடினார். இதனிடையே, பார்ச்சூன் பாரிஷால் அணியின் உரிமையாளரான மிசானூர் ரஹ்மான் ஷோயப் மாலிக் வீசிய நோ-பால்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பி.பி.எல் நிவர்க்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Shoaib Malik's BPL contract has been terminated over suspicion 'match fixing' case after his 3 No Balls.pic.twitter.com/8wdYKCZhEl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 26, 2024
ஷோயப் மாலிக் விளக்கம்
இந்நிலையில், பார்ச்சூன் பாரிஷால் அணியுடனான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது குறித்து சோயிப் மாலிக் றிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக பொய்கள் பரப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:-
பார்ச்சூன் பாரிஷாலுடன் நான் விளையாடும் நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நிராகரிக்க விரும்புகிறேன். எங்கள் கேப்டன் தமீம் இக்பாலுடன் நான் முழுமையாக விவாதித்தேன். மேலும் முன்னோக்கி செல்லும் வழியை நாங்கள் பரஸ்பரமாக திட்டமிட்டுள்ளோம். துபாயில் நிச்சயதார்த்தத்திற்காக நான் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
பார்ச்சூன் பாரிஷால் அணி இனி விளையாட இருக்கும் போட்டிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தேவைப்பட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்க நான் தயாராக இருக்கிறேன். நான் எப்போதும் விளையாட்டில் மகிழ்ச்சியைக் கண்டு வருகிறேன். அதனைத் தொடர்ந்து செய்வேன்.
வதந்திகள், குறிப்பாக சமீபத்தில் பரவும் வதந்திகள் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த ஆதாரமற்ற வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தகவலை நம்புவதற்கும் பரப்புவதற்கும் முன் ஒவ்வொருவரும் அதைச் சரிபார்ப்பது முக்கியம். பொய்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். துல்லியத்திற்கு முன்னுரிமை அளிப்போம் மற்றும் உண்மைகளைப் பற்றிய தெளிவான புரிதலை உறுதிசெய்ய நம்பகமான ஆதாரங்களை நம்பியிருப்போம். உங்கள் புரிதலுக்கும் விடாமுயற்சிக்கும் நன்றி." என்றும் அவர் கூறியுள்ளார்.
Official statement ;
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) January 26, 2024
I would like to address and dismiss the recent rumors circulating about my playing position with Fortune Barishal. I had a thorough discussion with our captain, Tamim Iqbal, and we mutually planned the way forward. I had to leave Bangladesh for a… pic.twitter.com/kmPqPt1nxv
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.