Advertisment

'நானா இருந்தா கேப்டன்சியை ராஜினாமா பண்ணிருப்பேன்': பாபர் அசாம் பற்றி மாஜி வீரர் பேச்சு

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பாபர் அசாம் இடத்தில் தான் இருந்திருந்தால் தற்போது என்ன செய்திருப்பார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shoaib Malik on Babar Azams captaincy Tamil News

2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Pakistan | Shoaib Malik | Babar Azam | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை வெளியேறியுள்ளன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Shoaib Malik on what he would do in Babar Azam’s place: Would have immediately resigned from captaincy

சூப்பர் 8-க்கு முன்னேறியுள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்  ஆகிய அணிகளும்,  குரூப் 2ல் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகள் நாளை மறுநாள் புதன்கிழமை (ஜூன் 19) முதல் நடைபெற உள்ளது. இரண்டு குழுவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றியைப் பெறும் அணிகள் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும். 

 

பாகிஸ்தான் ஏமாற்றம்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது. அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானதால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இதன் மூலம் 5 புள்ளிகள் உடன் அமெரிக்க அணி இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் பாகிஸ்தானின் சூப்பர் 8 வாய்ப்பு முடிவுக்கு வந்தது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று, சொந்த நாடு புறப்பட்டுள்ளது. 

2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில், இந்த இரண்டு தொடர்களின் போதும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதனால், பாபர் அசாம் தனது கேப்டன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

சோயப் மாலிக் கருத்து  

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பாபர் அசாம் இடத்தில் தான் இருந்திருந்தால் தற்போது என்ன செய்திருப்பார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி ஃபிளிக் ஆன் டென் ஸ்போர்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற ஷோயப் மாலிக் பேசுகையில், “(நான் பாபர் அசாமின் இடத்தில் இருந்திருந்தால், எனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்திருப்பேன். இது எனக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த போது நடந்துள்ளது. பின்னர் 2009-10ல் மீண்டும் ஒரு வருடத்திற்கு தேசிய அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டது. நான் ஏற்கவில்லை. நான் எனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பினேன்.  பாபர் அசாமின் நம்பர்ஸ் (தரவுகள்) இதை ஆதரிக்கின்றன. ஆனால் நம்பர்ஸ்களை ஒதுக்கி வைப்போம். பாபர் அசாம் சிறந்தவராகவும் பாகிஸ்தானுக்காக விளையாடவும் முடிந்தால், நிச்சயமாக அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கேப்டன் என்பது அணிக்காக வீரர்களை உருவாக்கக்கூடிய ஒருவர்.” என்று கூறினார்.

பாபர் அசாம் கேப்டன்சி சாதனை 

பாபர் அசாம் 147 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்ததையும் சுட்டிக்காட்டி பேசிய சோயப் மாலிக், "பாபர் அசாமின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் ஒருநாள் உலகக் கோப்பைகள், மூன்று டி20 உலகக் கோப்பைகள் மற்றும் இரண்டு ஆசியக் கோப்பைகள் உட்பட ஆறு ஐசிசி போட்டிகளில் விளையாடியது. ஆனால் ஒன்றில் கூட வெற்றிபெறத் தவறிவிட்டது. பாகிஸ்தானின் கேப்டனாக எந்த ஒரு ஆட்டத்திலும் பாபர் அசாம் ஓய்வெடுக்கவில்லை. எனவே, அவர் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்க எதுவும் இல்லை.  என்றும் அவர் கூறினார்.

டி-20 போட்டிகளில், பாகிஸ்தான் தேசிய அணியின் கேப்டனாக, பாபர் அசாம் 77 இன்னிங்ஸ்களில் விளையாடி 37.28 சராசரியிலும், 129.98 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 2610 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய 38 போட்டிகளில் கேப்டன் பொறுப்பு இல்லாத போட்டிகளில் அவரது சராசரி 48.48 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pakistan Babar Azam Shoaib Malik T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment