/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-15T161013.364.jpg)
Shoaib Malik shares heartfelt post for Sania Mirza on her birthday amid divorce rumours Tamil News
Shoaib Malik - Sania Mirza - divorce rumours Tamil News: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருபவர் சானியா மிர்சா. டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்று இருக்கிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
எல்லை தாண்டிய காதலில் விரிசல்
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-15T162008.568.jpg)
எல்லை தாண்டிய இந்த காதல் தம்பதிக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகன் இருக்கிறார். பல்வேறு நட்சத்திர ஜோடிகளைப் போல் இந்த ஜோடியும் விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதன் தொடக்கமாக, சானியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ரகசிய செய்தி இருந்தது. அதில் அவர் "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாஹ்வைக் கண்டுபிடிக்க"என்று குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், மாலிக் மற்றும் மிர்சாவின் குழப்பமான திருமணத்திற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்று கூறப்பட்டது. ஆயிஷாவுடனான அவரது நெருக்கமே மிர்சாவுடனான அவரது திருமண வாழ்க்கை விரிசலுக்கு வழிவகுத்தது என்று வதந்திகள் பரவின.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-15T162000.006.jpg)
யார் இந்த ஆயிஷா?
சோயப் மாலிக் மற்றும் ஆயிஷா ஓமர் 2021ல் ஒரு போட்டோஷூட்டில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். பின்னர், அதைப் பற்றி பேசிய மாலிக், அவரை பாராட்டினார். மேலும் அவர்களின் படப்பிடிப்பின் போது அவர் தனக்கு நிறைய உதவி செய்ததாகவும் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-15T161019.303.jpg)
ஆயிஷா ஒரு பாகிஸ்தான் நடிகை மற்றும் பிரபலமான யூடியூபர் ஆவார். அவர் நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் மிகவும் நாகரீகமான நடிகைகளில் இவரும் ஒருவர். அங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர்.
முற்றுப்புள்ளி வைத்த சோயப் மாலிக்...
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-15T154449.476.jpg)
இந்நிலையில், சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதியின் விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றிப்புள்ளி வைத்துள்ளார். மேலும், ஸ்வீட் மெஜேஜ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ஃபாரா கானுடன் சேர்ந்து சானியா பிறந்தநாளை கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#SportsClicks || முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள் இன்று!https://t.co/gkgoZMIuaK | #HBDSaniaMirza | #SaniaMirza | @MirzaSaniapic.twitter.com/UGIevr5Uyw
— Indian Express Tamil (@IeTamil) November 15, 2022
தற்போது, அதற்கு ஈடாக சானியா மிர்சாவுக்கு சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தியும் வைரலாகி வருகிறது. சோயிப் மாலிக் சானியா மிர்சாவின் தோள் மீது கைகளைப் போட்டுக் கொண்டு அவரை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா….உடல் நலனும் மகிழ்ச்சியும் முழுமையாக கிடைக்க வாழத்துகள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த வாழ்த்து புகைப்படம் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Happy Birthday to you @MirzaSania Wishing you a very healthy & happy life! Enjoy the day to the fullest... pic.twitter.com/ZdCGnDGLOT
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) November 14, 2022
இந்த ஜோடி விரைவில் ஒரு டாக் ஷோவை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது துபாயில் வசிக்கும் ஷோயப் மற்றும் சானியா இருவரும் 'தி மிர்சா மாலிக் ஷோ' என்ற ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக தோன்றுவார்கள். இது OTT பிளாட்ஃபார்ம் 'உர்துஃப்ளிக்ஸ்' இல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி சானியாவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். சானியாவின் நெருங்கிய தோழியும் பாடகியுமான அனன்யா பிர்லாவும் சானியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரமாக இருந்தலும், ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் சானியா மிர்சா. அவரது முகத்தை என்றும் மறவா அவரது ரசிகர்கள் தங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டு மழையையும் பொழிந்து வருகிறார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.