Advertisment

சானியா மிர்சாவுடன் விவாகரத்து: பாக்., நடிகையை மணந்த சோயிப் மாலிக்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு விவாகரத்து கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Shoaib Malik ties knot with Pakistan actor Sana Javed Tamil News

கடந்த ஆண்டு நடிகை சனா ஜாவித் பிறந்தநாளன்று சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sania Mirza | Shoaib Malik: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்தவர் சானியா மிர்சா. டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் 6 முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்று இருக்கிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

எல்லை தாண்டிய இந்த காதல் தம்பதிக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகன் இருக்கிறார். பல்வேறு நட்சத்திர ஜோடிகளைப் போல் இந்த ஜோடியும் விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனிடையே, சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் மனைவி சானியா மிர்சா தொடர்பான பதிவுகளை நீக்கினார். இதனால், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக வெளிவந்த தகவல் உறுதியான வகையில் இருந்தது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து தொடர்பாக பதிவு சூசகமான ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பது கடினமானது. உடலை சரியாக வைத்திருப்பது கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிதை திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. சானியா மிர்சாதான் சோயிப் மாலிக்கிற்கு விவாகரத்து கொடுத்துள்ளார். கணவனை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக சானியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடிகை சனா ஜாவித் பிறந்தநாளன்று சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், சனாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் சோயிப் மாலிக் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். அப்போது இருந்தே சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டு சனாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் மாலிக்கும் சனாவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் திருமணம் செய்துகொண்ட திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சனா ஜாவேத் முன்பு பாடகர் உமர் ஜஸ்வாலை மணந்தார். இருவரும் 2020 இல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரிந்தனர்.

இதேபோல், ஆயிஷா, சானியா மிர்சா ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சோயிப் மாலிக் தற்போது பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை 3வதாக திருமணம் செய்துள்ளார். அவர் இன்னும் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். இந்த ஃபார்மெட்டில் இருந்து மட்டும் அவர் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Shoaib Malik ties knot with Pakistan actor Sana Javed

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Shoaib Malik Sania Mirza
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment