Advertisment

அடுத்தடுத்து அரை சதம்: விராட் கோலி இடத்தை 'புக்' செய்யும் ஸ்ரேயாஸ்

Shreyas Iyer scored back-to-back fifties while batting at No 3 in the ongoing ODI series against West Indies Tamil News: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து 2 அரைசதம் அடித்தது உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்று கூறியுள்ள ஷ்ரேயாஸ், அதை ஒரு சதமாக மாற்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Shreyas Iyer books seat to bat at No 3 in ODIs

AdvertisementShreyas Iyer bats in the second ODI against West Indies.

IND vs WI - Shreyas Iyer Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது தற்காலிக ஃபார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே பெரியதாக ரன்களை குவிக்காத அவர் இன்னும் தனது 71-வது சத தேடலில் இருந்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடர்களில் கூட அவர் பெரிதும் சோபிக்காமல், அவரை மலைபோல் நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அங்கு நடந்த 6 இன்னிங்ஸ்களில் இருந்து 76 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. இதில், மாற்றியமைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் 2 டி20கள் அடங்கும்.

Advertisment

கோலியின் இந்த தொடர் தடுமாற்ற ஆட்டம் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு வழங்கும் முடிவை அணி நிர்வாகத்தை எடுக்க வைத்துள்ளது. இந்த நாட்களில் அவர் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று நம்பலாம். இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கோலிக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், அணி நிர்வாகம் அளித்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி அசத்தி வருகிறார்.

தற்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், நடந்து முடிந்த 2 ஒருநாள் ஆட்டங்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக அரைசதங்களை அடித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

3வது இடத்தில் பேட்டிங்

அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்வதால் தான் இவ்வாறு அரைசதம் அடிக்கிறார் என்பதல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இது அவரது 7வது அரைசதமாகும். "3வது இடத்தில் பேட் செய்வது ஒரு வேடிக்கையான நிலை, நான் அதை மிகவும் ரசிக்கிறேன். பேட் செய்வதற்கான சிறந்த நிலைகளில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தால் நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்கு செல்வீர்கள்.

நீங்கள் உள்ளே சென்று புதிய பந்தை பார்த்துவிட்டு உங்கள் இன்னிங்ஸை உருவாக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் அந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அதை எடுத்து ரன் ரேட் உயர்த்தப்படுவதைப் பார்க்க வேண்டும், ”என்று ஷ்ரேயாஸ் ஐயர் 2வது ஒருநாள் போட்டிக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து தொடரில், அவர் அதிக நேரம் விளையாடாமலும், பெரிய ரன்களை சேர்க்காமலும் இருந்தார். ஆனால் அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவரின் மீது இருந்த சந்தேகங்கள் தவறு என்று நிரூபித்துள்ளார்.

“அணியில் விளையாடுவது என் கையில் இல்லை. நான் செய்யக்கூடியது என்னவென்றால், களத்திற்கு வெளியே கடுமையாக பயிற்சி செய்து, எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் அதை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

இன்றும் நேற்று முன்தினமும், எதையும் விட பெரியதாக நான் கருதும் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் எனது 100 சதவீதத்தை கொடுத்தேன், நான் களத்தை விட்டு வெளியேறியபோது, ​​​​எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ” என்றும் அவர் கூறியிருந்தார்.

நீட்டிக்கப்பட்ட வலைப்பயிற்சி பற்றி…

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் அவர் அதிக நேரம் எடுத்துக்கொண்ட வலைப்பயிற்சி அவர் ஸ்கோர் செய்த உதவியதாகவும் ஷ்ரேயாஸ் தெரிவித்து இருக்கிறார்.

"களத்திற்கு வெளியே கடின உழைப்பு எப்போதும் பலன் தரும். களத்திற்கு வெளியே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பு இது. நான் கடினமாக உழைக்கிறேன். ஏனென்றால் விக்கெட்டுகள் மற்றும் நிலைமைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. மேலும் நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் மற்றும் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் என் வேலையைச் செய்வேன் மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பேன் என்பது என் மனநிலை." என்று அவர் கூறியுள்ளார்.

சதமடிக்க தவறுவது பற்றி ஷ்ரேயாஸ்…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ந்து 2 அரைசதம் அடித்தது உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்று கூறியுள்ள ஷ்ரேயாஸ், ஆனால் நான் அதை ஒரு சதமாக மாற்றியிருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற தொடக்கங்கள் கிடைக்காது. உங்கள் ஐம்பதுகளை நூறாக மாற்றினால், அது சிறப்பாக இருக்கும். எனது இன்னிங்ஸை மாற்ற தற்போது எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அணி வெற்றி பெறும் வரை, பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நான் பெற்ற ஸ்கோர் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் எனக்கு, நான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விதம் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. நான் அணிக்கு இன்னும் நிறைய பங்களித்திருக்க வேண்டும். ஆனால் நான் வெளியேறிய விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அடுத்த போட்டியில் சதம் அடிப்பேன் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் உடனான பார்ட்னர்ஷிப்…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் 312 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய இந்திய அணியில் ஷுப்மான் கில் (43), சூர்யகுமார் யாதவ் (9) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணியின் துரத்த வேண்டிய ரன்ரேட் அதிகமாக இருக்கத் தொடங்கின. இந்த சூழலில் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் (54) ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேலும், 94 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தனர்.

"இது ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் ஆக பார்க்கிறேன். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை அணி இழந்த நிலையில், நாங்கள் 3 விக்கெட்டுக்கு 60 ஆக இருந்தோம் (79/3), அங்கிருந்து, நாங்கள் மீண்டும் ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. சஞ்சு உள்ளே வந்து வெளிப்படையாக நிறைய உள்நோக்கம் காட்டினார். நான் ஏற்கனவே பேட்டிங் செய்து கொண்டிருந்தேன்.

publive-image

நான் சுமார் 20 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களில் பேட்டிங் செய்திருந்தேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியும், சஞ்சு அதே நேரத்தில், அவர் சில பந்துகளை எதிர்கொண்டார், பின்னர் அவர் சுழற்பந்து வீச்சாளர்களைப் பின்தொடர்ந்தார். அவர் அவர்களின் ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். திடீரென்று, வேகபந்துவீச்சு எங்களை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்து, நாங்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, எதிரணியின் வேகத்தாக்குதலை முறியடித்தோம்." என்று ஷ்ரேயாஸ் கூறியுள்ளார்.

அக்சர் படேல் எனும் சூறாவளி…

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ஓவர்களில் 107 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களமாடி இருந்த அக்சர் படேல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததோடு தனது முதல் ஒருநாள் அரைசதத்தையும் விளாசி இருந்தார். இவற்றுடன் படேல் அணியின் வெற்றியை உறுதி செய்து, தொடரை இந்திய அணி கைப்பற்றவும் உதவினார்.

ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் டிரஸ்ஸிங் ரூமில் எப்படி உணர்ச்சிகள் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தன என்பதையும், ஒவ்வொரு பாஸிங் பந்திலும் டீம் இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்தினார் என்பதையும் ஷ்ரேயாஸ் ஐயர் தனது செய்தியாளர் சந்திப்பில் விவரித்துள்ளார்.

"உண்மையில், அது வேடிக்கையாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம், ராகுல் சார் மிகவும் டென்ஷனாகிவிட்டார்; அதை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

அதுபோல் நிறைய வீரர்களும் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர். அழுத்தமான சூழ்நிலையில் மிகவும் அமைதியாகவும் இசையமைப்புடனும் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் சமீபத்தில் பல போட்டிகளில் விளையாடியதால், இந்த உணர்ச்சிகள் அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது எங்களுக்கு மற்றொரு விளையாட்டு. நாங்கள் சிறப்பாகச் செய்தோம் என்று நினைக்கிறேன், குறிப்பாக அக்சர், இன்று அவர் முடித்த விதம். அது ஒரு சிறந்த நாக்" என்று அவர் கூறியுள்ளார்.

த்ரில்லர் வெற்றி… தொடரை கைப்பற்றி இந்தியா…

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. தனது அசத்தலான மற்றும் அதிரடியான ரன் சேசிங் மூலம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் ஆட்டம் வருகிற 27ம் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Indian Cricket Team Shreyas Iyer India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment