Advertisment

கடும் முதுகு, இடுப்பு வலியால் அவதி: இங்கி., டெஸ்ட் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் விலகல்

இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Narasimha Rao, Chaudhary Charan Singh, MS Swaminathan to receive Bharat Ratna Tamil News

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shreyas Iyer  | India vs England: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.  

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 

ஸ்ரேயாஸ் விலகல் 

இந்த நிலையில், இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் முன்னோக்கி டிபெஃன்ஸ் ஆடும் போது முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக கூறியுள்ளார் என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களின் கிரிக்கெட் கிட்ஸ், 3வது போட்டி நடக்கும் ராஜ்கோட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் கிட்ஸ் மட்டும் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

"கூடுதல் சோதனைகளுக்காக ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) அனுப்பப்படுவார். ஆனால் அடுத்த மாதம் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று நம்புகிறோம்.

30 பந்துகளுக்கு மேல் விளையாடிய பிறகு, அவரது முதுகு இறுக்கமாக இருப்பதாகவும், முன்னோக்கி டிபெஃன்ஸ் விளையாடும் போது அவரது இடுப்பில் வலி ஏற்படுவதாகவும் இந்திய அணி நிர்வாகம் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் முதல் முறையாக இந்த சிக்கலை எதிர்கொள்கிறார். எனவே அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். அவர் பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார்." என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர் தொடரை தவறிவிட்டால், காயம் காரணமாக 2வது டெஸ்டை தவறவிட்ட கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ராஜ்கோட் டெஸ்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வுக் குழு ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக யாரை அணியில் சேர்க்கும் என்கிற முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், விசாகப்பட்டினத்தில் அறிமுகமான ரஜத் படிதாருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.

இந்திய அணி தேர்வுக் குழு நேற்று வியாழக்கிழமை அணியைத் தேர்வு செய்யத் திட்டமிட்டது. ஆனால் முன்னணி வீரர் விராட் கோலி அணியில் இணைவதை உறுதிப்படுத்த இன்னும் ஒரு நாள் காத்திருக்க முடிவு செய்தது. இருப்பினும், அவர் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் தான். ஆனால் அவர் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இருப்பாரா என்பதை தேர்வுக்குழு அறிய விரும்புகிறது. 

2வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சிறிய விடுப்பில் இருந்து வரும் இந்திய அணியினர், பிப்ரவரி 11-ம் தேதி ராஜ்கோட்டில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த நாள் பயிற்சி மீண்டும் தொடங்கும். இதனிடையே, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Breaking: Shreyas Iyer complains of stiff back and groin pain, likely to miss last three Tests

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Shreyas Iyer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment