Advertisment

'அவர் பிட் ஆகத் தான் இருக்கிறார்': ரஞ்சி டிராபிக்கு விடுப்பு கேட்ட ஷ்ரேயாசுக்கு ஆப்பு வைத்த என்.சி.ஏ

முதுகுவலி காரணமாக ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்த நிலையில், 'அவர் பிட் ஆகத் தான் இருக்கிறார்' என என்.சி.ஏ மெயில் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Shreyas Iyer fit NCA after he opts out of Ranji Trophy back pain Tamil News

ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவருக்கு புதிய காயம் ஏதும் இல்லை என்றும் தேர்வாளர்களுக்கு என்.சி.ஏ மெயில் அனுப்பியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India Vs England, 4th Test, Ranchi | Shreyas Iyer: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. 

ஷ்ரேயாஸ் விலகல் 

இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி காயம் காரணமாக விலகினார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 35, 13, 27 மற்றும் 39 என ரன்களை எடுத்தார். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டபோது ஷ்ரேயாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணமாக, 2வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் முதுகு வலி ஏற்பட்டதாக புகார் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

மெயில் அடித்த என்.சி.ஏ

இந்நிலையில், முதுகுவலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிக்கான தேர்வில் பங்கேற்க போவதில்லை என மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டி விளையாடுவதில் இருந்து விடுப்பு பெறவே ஸ்ரேயாஸ் அவ்வாறு தெரிவித்திருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில், முதுகுவலி காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கும் பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, பெங்களுரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவத் துறைத் தலைவர் நிதின் படேல், தேர்வாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் ஷ்ரேயாசுக்கு 'புதிய காயம் எதுவும் இல்லை' என்றும், அவர் 'பிட்' ஆகத் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்த அந்த மின்னஞ்சலில்,“இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் ஒப்படைப்பு அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி மற்றும் தேர்வுக்கு தயாராக இருந்தார். அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறிய பிறகு தற்போது புதிய காயங்கள் எதுவும் அவருக்கு இல்லை." என்று நிதின் படேல் எழுதியுள்ளார். 

முன்னதாக, இந்திய அணி தேர்வாளர்கள், பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவின் அறிவுறுத்தல்களை பெற்ற பிறகு, ஷ்ரேயாசை ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடச் சொல்லியுள்ளார்கள். அதன்மூலம் அவரது முதுகு பேட்டிங் மற்றும் நீண்ட நேரம் களத்தில் இருக்கும் சிரமத்திற்குப் பழகிவிடும் என்றும் அவரிடம் கூறியுள்ளார்கள். 

ஜெய் ஷா அதிரடி உத்தரவு 

கடந்த வாரம் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, மத்திய ஒப்பந்தம் மற்றும் இந்தியா ஏ கிரிக்கெட் வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காத வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "உள்நாட்டு கிரிக்கெட் தேசிய அணிக்கு தேர்வுக்கான முக்கியமான அளவுகோலாக உள்ளது. உள்நாட்டு சிவப்பு-பந்து கிரிக்கெட்டை விட ஐபிஎல்-க்கு வீரர்கள் முன்னுரிமை அளிக்கும் ட்ரெண்ட் நிலவி வருகிறது. 

இது கவலைக்குரியது. சில வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விட ஐபிஎல்-க்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர், இது எதிர்பார்க்கப்படாத மாற்றமாகும். உள்நாட்டு கிரிக்கெட் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டின் அடித்தளமாக இருந்து வருகிறது, மேலும் விளையாட்டிற்கான எங்கள் பார்வையில் அது ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்படவில்லை. உள்நாட்டு கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பை உருவாக்குகிறது மற்றும் இந்திய அணிக்கு ஊக்கமளித்து வருகிறது. 

இந்திய கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. இந்தியாவுக்காக விளையாட விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்களை நிரூபிக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் செயல்திறன் தேர்வுக்கான முக்கியமான அளவுகோலாக உள்ளது மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காதது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Shreyas Iyer is fit, NCA says a day after he opts out of Ranji Trophy because of back pain

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Shreyas Iyer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment