/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-21-1.jpg)
Shreyas Iyer, India vs New Zealand, India cricket, Team India, Fitness Team India, virat kohli, fitness video, twitter, viral video
Shreyas Iyer fitness video : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வழியில், இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் பிட்னெஸ் வீடியோ வெளியிட்டுஅசத்தியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சமீபகாலமாக அனைத்து போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிவருகிறது. இதற்கு முழுக்காரணமாக அவர்கள் சொல்வது வீரர்களின் உடல்திறனைத்தான்...விராட் கோலி, தனது உடற்திறனை மேம்படுத்தும் விதத்தில் பிட்னெஸ் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பிட்னெஸ் பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மற்றவர்களுக்கும் அறிவுறுத்தி வருகிறார். விராட் கோலி, அவ்வப்போது பிட்னெஸ் செய்வது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விராட் கோலியைப்போன்றே, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் பிட்னெஸ் வீடியோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
127cm of air time #flyhighpic.twitter.com/8l1MDBEBQ3
— Shreyas Iyer (@ShreyasIyer15) February 3, 2020
"127cm of air time #flyhigh என்று அந்த வீடியோவிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 63 இடங்கள் முன்னேறி 451 புள்ளிகளுடன் தற்போது 55வது இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் பின் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.