Advertisment

ஆண்டர்சன் கையில் அவுட்: நினைவூட்டிய பேர்ஸ்டோ; டோஸ் கொடுத்த கில்.... ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஆடியோ!

இந்திய வீரர் சுப்மான் கில் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இருவரும் மாறி மாறி ஸ்லெட்ஜிங் செய்த ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Shubman Gill and Jonny Bairstow sledging battle caught on stump mic in 5th Test IND VS ENG Tamil News

ஜானி பேர்ஸ்டோ தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமாடிய நிலையில், அவர் முதல் இன்னிங்சில் 29 ரன்னுக்கு அவுட் ஆனார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England, 5th Test, Dharamsala | Shubman Gill | Jonny Bairstow: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 

Advertisment

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாக் கிராலி 79 ரன்கள் எடுத்தார். மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் சதம் அடித்து மிரட்டிய ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், அரைசதம் அடித்த தேவ்தத் பாடிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

இதனையடுத்து 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 195 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், தொடரை 4-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 5 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

கில் - ஜானி பேர்ஸ்டோ ஸ்லெட்ஜிங் 

இந்நிலையில், இந்த போட்டியின் போது இந்திய வீரர் சுப்மான் கில் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இருவரும் மாறி மாறி ஸ்லெட்ஜிங் செய்த ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் சிக்கியது. இந்த ஆடியோ மற்றும் வீடியோ  சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 

ஜானி பேர்ஸ்டோ தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமாடிய நிலையில், அவர் முதல் இன்னிங்சில் 29 ரன்னுக்கு அவுட் ஆனார். அதனால், 2வது இன்னிங்சில் பேர்ஸ்டோ சிறப்பாக ஆட வேண்டும் என்கிற நோக்கில் களம் புகுந்தார். 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 39 ரன்கள் எடுத்து இருந்தபோது குலதீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பேர்ஸ்டோ, ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த சுப்மன் கில்லுடன் வார்த்தைப் போரில் குதித்தார். அப்போது, பேர்ஸ்டோ 2வது நாள் ஆட்டத்தின் போது ஜேம்ஸ் ஆண்டர்சனால் வெளியேற்றப்பட்டதை கில்லுக்கு நினைவூட்டினார். 

"சோர்வடைவது பற்றி ஜிம்மியிடம்  (ஜேம்ஸ் ஆண்டர்சன்) என்ன சொன்னாய்?. அதன் பிறகு அவர் உன்னை அவுட் ஆக்கினார் அல்லவா?" என்று பேர்ஸ்டோ கூறினார். அதற்கு பதிலளித்த கில், அதனால் என்ன? அது எனது சதத்திற்குப் பிறகு நடந்தது. இங்கே நீ எத்தனை சதம் அடித்துள்ளாய்?" என்று கேள்வி எழுப்பி டோஸ் கொடுத்தார். இதனை கொஞ்சமும் செவிமெடுக்காமல் பேர்ஸ்டோ தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

இதனிடையே, ஷார்ட் லெக் திசையில் நின்று கொண்டிருந்த சர்ஃபராஸ் கான், 'எடுத்தது கொஞ்ச ரன்னு, அதுக்குனு இந்த ஆட்டமா?' என்பது போல் கூறி கலாய்த்தார். இந்த சம்பவத்தின் ஆடியோ ஸ்டெம்ப் மைக்கில் சிக்கிய நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Shubman Gill
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment