Advertisment

ஹசிம் அம்லா, பாபர் அசாம் சாதனை தகர்ப்பு: ஒருநாள் போட்டியில் ரெக்கார்ட் படைத்த சுப்மன் கில்

IND vs NZ World Cup 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 31 ரன்னில் அவுட் ஆன சுப்மன் கில், அதற்கு முன்னதாக மகத்தான ஓர் சாதனை படைத்தார்.

author-image
WebDesk
New Update
 Shubman Gill

ஹாசிம் அம்லா 40 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை படைத்திருந்தார்.

IND vs NZ World Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்தச் சாதனை மைல்கல்லை வெறும் 38 இன்னிங்ஸ்களில் சாதித்துள்ளார். இதன்மூலம் முன்னாள் தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் முந்தைய சாதனையை முறியடித்தார். ஹசிம் அம்லா 40 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை படைத்தார். அதேபோல் பாபர் அசம் சாதனையையும் சுப்மன் கில் தகர்த்துள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு முழுவதும், தொடக்க பேட்ஸ்மேன் விதிவிலக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 2023 இல் 22 இன்னிங்ஸ்களில் 1300 ரன்களை குவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் ஐந்து அரை சதங்கள் மற்றும் பல சதங்களை அடித்துள்ளார்.
இதற்கிடையில் சுப்மன் கில், செப்டம்பர் 2023க்கான ICC ஆடவர் மாதத்திற்கான விருதையும் வென்றுள்ளார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்தச் சாதனையை நெருங்க 14 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது சுப்மன் கில், பவுண்டரிக்கு பந்தை விரட்டி இந்தச் சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment