ஐதராபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 145 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை சுப்மன் கில் அடித்தார். இந்த சாதனையை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். அவரது இன்னிங்ஸ் 19 பவுண்டரிகள் மற்றும் 8 பெரிய சிக்ஸர்களுடன் அலங்கரிக்கப்பட்டது.
இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றார். இதற்கு முன்பு அந்த சாதனையை இஷான் கிஷான் வைத்திருந்தார்.
இதையும் படியுங்கள்: உடல் எடைதான் இவருக்கு தடையா? முடிவுக்கு வராத சர்ஃப்ராஸ் கான் விவாதம்
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருந்த இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு இது கிட்டத்தட்ட சிறப்பான போட்டி. அவர் தொடக்க விக்கெட்டுக்கு ரோஹித்துடன் 50 ரன் பார்ட்னர்ஷிப்பை இணைத்தார், ரோஹித் ஆட்டமிழந்தாலும், கில் எந்த அசௌகரியமும் இல்லாமல் ஆடுகளத்தில் தொடர்ந்தார். விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் என இந்தியா அடுத்தடுத்து இரண்டு விரைவான விக்கெட்டுகளை இழந்தபோதும் வலது கை ஆட்டக்காரரான சுப்மன் கில் தொடர்ந்து தனது ஷாட்களை விளையாடினார்.
சுப்மன் கில் தனது மூன்றாவது ஒருநாள் போட்டி சதத்தை எட்டினார். கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் போன்றவர்களை விஞ்சி ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ரன்களைக் கடந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
சுப்மன் கில் 100 ரன்களைத் தாண்டியவுடன் ரன் குவிப்பு எளிதாகிவிட்டது, கிட்டத்தட்ட அனைத்து பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். அவர் 122 பந்துகளில் தனது 150 ரன்களைக் கடந்தார், மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும், கில் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தார், இது இந்தியாவை 300 ரன்களைக் கடக்க உதவியது.
லாக்கி பெர்குசன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசி இரட்டை சதம் அடித்தார் சுப்மன் கில். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக நாக்பூரில் 186 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்த நிலையில், சுப்மன் கில் அதையும் தாண்டி ரன்கள் எடுத்து மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.