Shubman Gill | Indian Cricket Team | Zimbabwe: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு நகர்ந்துள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது.
இந்த தொடர் வெற்றிகள் மூலம் 4 அணிகள் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்) இடம் பெற்றுள்ள குரூப் 1-ல் இந்தியா 4 புள்ளிகளுடன், +2.425 நெட் ரன்ரேட்டுடன் முதலாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்திய அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் இந்தியாவுக்கான அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். அதே நேரத்தில், நல்ல நெட் ரன்ரேட் வைத்திருக்கும் இந்தியாவுக்கு தோற்றால் கூட அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் - சுப்மன் கில் கேப்டன்?
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி முதலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் ஜூலை 06 தொடங்கி ஜூலை 14 வரையில் ஒரே ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த அணியில் இருந்து மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா உட்பட டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் முன்னணி வீரரகளுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. இதேபோல், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட உள்ளது. அதனால் கில் தலைமையில் இளம் இந்திய அணி ஜிம்பாப்வே மண்ணிற்கு சுற்றுப்பயணமாக செல்லவிருக்கிறது.
இந்த இளம் இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா போன்ற ஐ.பி.எல் தொடரில் அந்தந்த அணிகளுக்கான முன்னணி வீரர்கள் மற்றும் டி20 உலகக் கோப்பையின் போது பெஞ்சில் இருக்கும் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் ஜிம்பாப்வேக்கு செல்லவிருக்கிறார்கள்.
இந்திய சீனியர் அணி தேர்வுக் குழு ஏற்கனவே வரவிருக்கும் தொடருக்கான தற்காலிக 20 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் ஹர்திக் மற்றும் சூர்யகுமாரிடம் இருந்து பதில் கேட்க காத்திருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
இந்திய அணிக்கு ரிசர்வ் வீரராக அமெரிக்கா சென்ற கில், டி20 உலகக் கோப்பை போட்டிகள் எதிலும் இடம்பெற வாய்ப்பில்லாததால், அணி நிர்வாகம் அவருக்கு ஓய்வு அளிக்க விரும்பியது. அதனால், அவர் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானுடன் இந்தியா திரும்பினார்.
பயிற்சியாளராக லட்சுமணன்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை இந்திய வாரியம் இன்னும் நியமிக்காத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வி.வி.எஸ் லட்சுமணனை பொறுப்பேற்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. லக்ஷ்மண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தலைவராக உள்ளார். ஜூலை 27-ம் தேதி தொடங்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் அடுத்த பயிற்சியாளர் சேர வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.