IND vs NZ T20I Series: Shubman Gill is set for a major milestone for India against New Zealand on Friday at the Sky Stadium Tamil News
IND vs NZ T20I Series Tamil News: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Advertisment
மைல்ஸ்டோன் அலர்ட்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் களமாடவுள்ள இந்திய வீரர் ஷுப்மான் கில், புதிய மைல்கல்லை அடைய இருக்கிறார். 23 வயதான அவர், இந்திய டி20 அணியில் களமிறங்குவதன் மூலம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
டிசம்பர் 2006ல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் சர்வதேச டி20-யை இந்தியா விளையாட தொடங்கியதில் இருந்து இதுவரை 99 வீரர்கள் அணியின் சார்பில் களமாடியுள்ளனர். இந்த நிலையில், ஷுப்மான் கில் இந்திய டி20 அணியில் அறிமுகமாகுவதன் மூலம் சிறப்பான அந்த புதிய மைல்கல்லை அடைவார்.
முன்னதாக கில், 2018-19 நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஒருநாள் அணியில் களமாடிய (பிரதிநிதித்துவப்படுத்திய) 227 வது வீரர் ஆனார்.
முதல் தொப்பியைப் பெற்ற வீரர் யார்?
2006 டிசம்பரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர் உட்பட 11 வீரர்கள் அதே போட்டியில் அறிமுகமானாலும், அவரது மும்பை அணியின் சக ஆட்டக்காரனான அஜித் அகர்கர் தான் இந்திய டி20 அணியின் முதல் தொப்பியைப் பெற்றார்.
அஜித் அகர்கர், அகரவரிசையில் தனது குடும்பப்பெயரின் முதலெழுத்துக்களால் இந்தியாவிற்கான முதல் தொப்பியைப் பெற்ற பெருமைக்குரியவர் ஆனார். சச்சின் மறுபுறம், அதே போட்டியில் அறிமுகமான போதிலும், கேப் எண்.11 என்ற பெருமையைப் பெற்றார்.
முதல் போட்டியில் விளையாடியது யார்?
இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டி20 போட்டியில் வீரேந்திர சேவாக், ஜாகீர் கான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பிடித்து இருந்தனர். இதில் தினேஷ் கார்த்திக் நடப்பு டி20 உலகக் கோப்பையில் மற்றும் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்து இருந்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்தியாவின் பிளேயிங் லெவன்: