worldcup 2023 | indian-cricket-team | shubman-gill: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை டெல்லியில் வருகிற புதன்கிழமை (அக்.11) சந்திக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்தியா டெல்லி புறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரரான சுப்மன் கில் விளையாடமாட்டார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 9 அக்டோபர் 2023 அன்று டெல்லிக்கு அணியுடன் பயணிக்க மாட்டார். சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023ல் அணியின் முதல் ஆட்டத்தைத் தவறவிட்ட தொடக்க வீரர், அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அணியின் அடுத்த ஆட்டத்தை பங்கேற்கவில்லை. அவர் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்." என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தொடக்க போட்டிக்கு முன்னதாக தொடக்க வீரர் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனால், நேற்றை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்தும் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
கில் இல்லாத நிலையில், ஸ்திரேலியா அணிக்கு எதிராக போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் மற்றொரு தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்கினார். அவர் கோல்டன் டக் ஆகி வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“