Shubman Gill Tamil News: ஜிம்பாப்வே மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில், இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 12: 45 மணிக்கு தொடங்கும் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கேப்டன் ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த அவர், நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். கில் சதம் விளாசிய போது (82 பந்துகளில்) அவரது ஸ்டிரைக் ரேட் 121.9 ஆக இருந்தது. அவரின் கட்டுப்பாட்டு சதவீதம் 96 ஆகவும், ஃபிளிக் ஷாட் அவருக்கு பயனுள்ள ஷாட்டாக இருந்தது.
One of many 💯 #Shubmangill #ZIMvIND pic.twitter.com/WGiVbxvOBI
— Rishabh (@reesab1410) August 22, 2022
சத தாகத்தை தீர்த்த கில்...
கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கில். இந்த ஆட்டத்திற்கு வரும்போது, அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 61.50 சராசரியில் 3 அரை சதங்களுடன் 369 ரன்கள் எடுத்து நம்பமுடியாத சாதனை படைத்தார்.
கடந்த மாதம், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, மழையால் விளையாடுவதற்கு முன்னதாகவே அவர் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் கில்லின் முக்கிய சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்தவை. 2020 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் அவர் அறிமுகமானதிலிருந்து, அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் நான்கு அரை சதங்களைப் பெற்றுள்ளார். கபாவில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் நான்காவது இன்னிங்ஸில் கில் 91 ரன்கள் எடுத்தார். தற்போது அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து தனது சத தாகத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.