Shubman Gill Tamil News: ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு மோதிய முதலாவது ஒருநாள் போட்டி, ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்றிரவு பகல் இரவு ஆட்டமாக நடந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களும், மிடில் ஆடரில் களமாடிய பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய தவான் - சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால் இந்திய அணி 30.5 வது ஓவரிலே விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தொடக்க வீரர்களில் 72 பந்துகளில் 1 சிக்ஸர் 10 பவுண்டரிகளுடன் சுப்மன் கில் 82 ரன்களும், 113 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் ஷிகர் தவான் 81 ரன்களும் எடுத்தனர்.
A brilliant comeback for @deepak_chahar9 as he is adjudged Player of the Match for his bowling figures of 3/27 👏👏#TeamIndia go 1-0 up in the three-match ODI series.#ZIMvIND pic.twitter.com/HowMse2blr
— BCCI (@BCCI) August 18, 2022
The perfection, Shubman Gill. pic.twitter.com/m0FrLZG4BA
— Johns. (@CricCrazyJohns) August 18, 2022
கிரேட் கேட்ச் கில்….
Great catch by Shubman Gill in slips. pic.twitter.com/rhXUmNvcoF
— Johns. (@CricCrazyJohns) August 18, 2022
இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்வே அணி 180 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியை ஆல்-அவுட் செய்ய 10வது விக்கெட் தேவை என்பதால், இந்திய அணி அசத்தலான பந்துவீச்சை தொடர்ந்து இருந்தது. அப்போது, களத்தில் இருந்த நியூச்சி ஓரு பவுண்டரியை விரட்டி இருந்த நிலையில், அக்சர் படேல் வீசிய 40.3-வது பந்தை விரட்ட முயன்றார். ஆனால் பந்து எட்ச் ஆகி ஸ்லிப்பில் இருந்த கில் வசம் கையில் சிக்கியது.
முன்னதாக, பந்து தனது பக்கம் என்பதை உணர்ந்த கில் அசத்தல் கேட்சை பிடித்து மிரட்டினார். அதுவும் ஒரு கையில் பிடித்தார். அவரின் அந்த கேட்ச் ஜிம்பாப்வே அணியை ஆல்-அவுட் செய்ய உதவியது. பின்னர் தொடக்க வீரராக களமாடி இருந்த கில் தனது அசத்தலான வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவர், மிகச்சிறந்த தொடக்க வீரருக்கான தகுதி தன்னிடம் இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளார்.
சுப்மன் கில் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
#ZIMvIND pic.twitter.com/HiO4ytBcna
— The sports 360 (@Thesports3601) August 18, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.