Advertisment

இந்திய அணிக்கு பின்னடைவு: சுப்மன் கில்லுக்கு டெங்கு

இந்திய நட்சத்திர வீரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என்கிற தகவல் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Shubman Gill tests positive for dengue doubtful for opening World Cup game vs AUS Tamil

கில் நேற்று வியாழக்கிழமை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அணியின் வலைப் பயிற்சியைத் தவற விட்டார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சோதனைக்குப் பின் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளானது உறுதியாகியுள்ளது.

Worldcup 2023 | india-vs-australia | shubman-gill: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரின் தொடக்கப் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.  

Advertisment

கில்லுக்கு டெங்கு காய்ச்சல் 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில் பங்கேற்க வாய்ப்பில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. 

கில் நேற்று வியாழக்கிழமை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அணியின் வலைப் பயிற்சியைத் தவற விட்டார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சோதனைக்குப் பின் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளானது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது. அவரின் உடல்நலத்தை இந்திய அணி நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும், வெள்ளிக்கிழமை மற்றொரு சுற்று சோதனைக்குப் பிறகு அவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க: Shubman Gill tests positive for dengue, doubtful for Sunday’s opening World Cup game against Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக கில் குணமடையத் தவறினால், கேப்டன் ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் அல்லது கே.எல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இந்தியாவின் பிரகாசமான இளம் பேட்டிங் திறமையான கில் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். ஏனெனில் அவர் இந்த ஆண்டு தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக கில் அபாரமாக இரட்டை சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது கண்ட சிறிய சரிவைத் தவிர, அவர் நம்பமுடியாத நிலைத்தன்மையைக் காட்டினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 890 ரன்களுடன் அதிக ரன் எடுத்தவர் மற்றும் சமீபத்திய ஆசிய கோப்பையில் 302 ரன்களுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த சில இன்னிங்ஸ்களில் அவர் 104, 74, 27*, 121, 19, 58 மற்றும் 67* ரன்கள் எடுத்துள்ளார்.

நிச்சயமற்ற சூழல்

முன்னதாக, இந்திய அணியின் சில முன்னணி நட்சத்திர வீரர்கள் காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பினர். ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆசிய கோப்பையின் போது கூட, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தொடக்க வீரர் கில்லுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி நிச்சயமற்ற சூழல் நிலவுவது குறிப்பித்தக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Worldcup Shubman Gill
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment