Advertisment

பழைய நியாபகத்தில் பந்தில் எச்சில் தடவிய வீரர்; எச்சரித்து சுத்தம் செய்த நடுவர்கள்

பந்தில் எச்சில் பயன்படுத்தப்படும் போதெல்லாம், ஆட்டம் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பந்தை சுத்தம் செய்ய நடுவர்களுக்கு அறிவுறுத்தப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பழைய நியாபகத்தில் பந்தில் எச்சில் தடவிய வீரர்; எச்சரித்து சுத்தம் செய்த நடுவர்கள்

ஒரு அணிக்கு ஒரு இன்னிங்ஸில் இரண்டு எச்சரிக்கைகள் வரை வழங்கப்படலாம்

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே மான்செஸ்டரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாளில் ஃபீல்டிங் செய்யும் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் டோமினிக் சிப்லே தற்செயலாக பந்தில் எச்சிலை பயன்படுத்தினார். இதை கவனித்த சக வீரர்களே, அம்பயர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் பிறகு நடுவர் மைக்கேல் கோஃப் பந்தை சுத்தப்படுத்தினார்.

Advertisment

கோவிட் 19 தொற்று நோய் பயம் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்துவதை ஐசிசி தற்காலிகமாக தடை செய்துள்ளது.

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் – ஐசிசி இன்று முக்கிய ஆலோசனை

கொரோனா பரவலால் துளியளவும் வீரர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில், ஐசிசி தெளிவாக உள்ளது. ஏனெனில், கொரோனா பரவல் இன்னமும் பல நாடுகளில் இருக்கும் போது, விளையாட்டு எனும் பொழுதுபோக்கை, மக்களின் மன அழுத்தத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவர, விளையாட்டு உலகம் ரீஸ்டார்ட் செய்யப்பட்டது. ஆனால், அதிலும் கொரோனா புகுந்தால், மீண்டும் எழ இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதால், உச்சக்கட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐசிசி கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது.

“பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீரர்கள் தற்செயலாக எச்சிலை பயன்படுத்தினால், அதை சுத்தப்படுத்துவதை நடுவர்கள் செய்வார்கள், ஆனால் தொடர்ந்து அவர்கள் செய்தால் எச்சரிக்கை விடப்படும்.

ஒரு அணிக்கு ஒரு இன்னிங்ஸில் இரண்டு எச்சரிக்கைகள் வரை வழங்கப்படலாம், ஆனால் அதை தாண்டினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். பந்தில் எச்சில் பயன்படுத்தப்படும் போதெல்லாம், ஆட்டம் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பந்தை சுத்தம் செய்ய நடுவர்களுக்கு அறிவுறுத்தப்படும்” என்று ஐசிசி முன்னர் தெரிவித்திருந்தது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை அடித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

அப்பாயிண்ட்மெண்ட் ரெடி; டீமுக்குள் வறீங்களா? – டி வில்லியர்ஸ் சரவெடியும், மாஸ் மீம்ஸ்களும்

பந்தை பளபளப்பாக்க எச்சில் தடவுவதை தடை செய்வதால் கிரிக்கெட் போட்டி பாதிக்காது என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்பு கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

England West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment