கிரிக்கெட் உலகின் லெஜண்ட் என எல்லோராலும் போற்றப்படுபவர் ஆஸ்திரேலிய வீரர் சர் டான் பிராட்மேன். இவரது புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sir Don Bradman’s baggy green cap which he wore in 1947-48 series against India sold for £245,000
இந்த தொப்பியை 1947-48 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடாரின் போது சர் டான் பிராட்மேன் அணிந்திருந்தார். தற்போது இதே தொப்பி ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போனது.
அப்போதே இந்த தொப்பியை இந்திய அணியின் மேலாளருக்கு சர் டான் பிராட்மேன் பரிசாக வழங்கினார். அந்த மேலாளர் இத்தொப்பியை இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இந்த தொப்பி மற்றொரு நபரால் சேகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டான் பிராட்மேன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த தொப்பி தான் நேற்றைய தினம் (டிச 3) இந்திய மதிப்பில் ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
டான் பிராட்மேனின் நினைவு பொருள்கள் ஏலம் எடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, டான் பிராட்மேன் பயன்படுத்திய முதல் பச்சை நிற தொப்பியை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 3,40,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தார்.
ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னேவின் தொப்பி கடந்த 2020-ஆம் ஆண்டில் 7,60,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் போனதே தற்போது வரை சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சர் டான் பிராட்மேனின் தொப்பி ஏலம் போனது.
டான் பிராட்மேன் ஆஸ்திரேலியாவுக்காக 1928 முதல் 1948 வரை 20 ஆண்டுகள் விளையாடினர். இதில் 52 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். தற்போது வரை டான் பிராட்மேன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக போற்றப்படுகிறார்.
1949-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 சராசரியுடன் அவர் ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு சாதனையாகவே உள்ளது.
நவம்பர் 1928 இல் பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பிராட்மேனுக்கு தொப்பி பரிசாக வழங்கப்பட்டது. பிராட்மேன் 1959 இல் தனது குடும்ப நண்பரான பீட்டர் டன்ஹாமுக்கு, இந்த தொப்பியை பரிசாக வழங்கினார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிராட்மேனின் அண்டை வீட்டுக்காரராக இருந்த டன்ஹாம், அச்சமயத்தில் மோசடி வழக்கின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். டன்ஹாம் தனது முதலீட்டாளர்களிடமிருந்து 1 மில்லியன் டாலர் மோசடி செய்ததற்காக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.