இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த வங்கதேசம், அடுத்தாக டி20 தொடரில் மோதவுள்ளது.
அந்த வகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.6) அன்று நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Six Gwalior cricket facts as international match returns after 14 years with IND vs BAN T20I
இந்த நிலையில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ள குவாலியர் ஸ்டேடியம் பற்றிய 6 முக்கிய விஷயங்களை இங்குப் பார்க்கலாம். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக, 2-வது சர்வதேச ஸ்டேடியமாக குவாலியர் நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இந்த ஸ்டேடியத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேற உள்ளது.
குவாலியர் ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, 1988 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, இங்குள்ள கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஹாக்கி மைதானமாக இருந்த இந்த மைதானம், 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஹாக்கி ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ரூப் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்திய ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் தம்பி தான் இந்த ரூப் சிங் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
ரூப் சிங் ஸ்டேடியம் 1996 இல் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையே முதல் மற்றும் ஒரே பகல்-இரவு ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியை நடத்தியது. ஐந்து நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் மும்பை அணி வெற்றி பெற்றது.
அடுத்தடுத்த நாட்களில் போட்டிகளை விளையாடிய இந்தியாவின் ஒரே மைதானமும் குவாலியர்தான். 1993 ஆம் ஆண்டு மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளை இந்தியா இங்கு தான் நடத்தியது. 2010 இல் இங்கு நடத்தப்பட்ட கடைசி ஒருநாள் போட்டியில், பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் இரட்டை சதத்தை பதிவு செய்த முதல் வீரர் ஆனார்.
நிறவெறிக் கொள்கையால் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இடைநிறுத்தப்பட்ட பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது ஒருநாள் போட்டியை 1991 இல் குவாலியர் நடத்தியது.
கடந்த 22 ஆண்டுகளாக கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் 12 ஒருநாள் போட்டிகளில் 8 அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடியிருக்கிறது. இந்த 8 போட்டிகளிலுமே இந்திய அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இங்கு தான் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 1996 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியும் விளையாடப்பட்டது.
கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி முக்கிய போட்டி, 2022 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை ஆட்டமாகும். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. தற்போதைய இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் மற்றும் சதத்தை பதிவு செய்ததன் மூலம் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“