Advertisment

SL vs BAN: சூப்பர் '4' சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி

Sri Lanka vs Bangladesh: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை இலங்கை அணி வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sl vs ban asia cup 2022 live score Updates Tamil News

Sri Lanka vs Bangladesh, 5th Match, Group B - Dubai International Cricket Stadium, Dubai

SL vs BAN: Asia Cup 2022, Match 5 score updates in tamil:ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை இலங்கை அணி வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Advertisment

இறுதி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் வீசினார். இதில் முதல் பந்தில் ஒரு ரன் வந்தது. 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அசிதா பெர்னாண்டோ (10 ரன், நாட்-அவுட்) 3-வது பந்தில் 2 ரன் எடுத்தார். மேலும் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 27 ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த ஆறு அணிகளும் தற்போது இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை லீக் சுற்றில் வீழ்த்திய இந்திய அணி சூப்பர் '4' சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதேபோல், ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் வங்க தேச அணியை வீழ்த்தி சூப்பர் '4' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், 'பி' பிரிவில் இருந்து சூப்பர் '4' சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் இன்று இரவு துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தொடக்க லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தன. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதேபோல், ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 127 ரன்களில் மடக்கப்பட்டு, 9 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிபிடித்தது ஆப்கானிஸ்தான்.

இலங்கை - வங்க தேச அணிகள் இரண்டுமே அந்த அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களையே அதிகமாக நம்பி இருக்கின்றன. வங்கதேச அணியின் பேட்டிங் வரிசைகள் உள்ள 5 வீரர்கள் இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 35 ரன்களை எடுத்துள்ளனர். இலங்கை அணியிலும் இதே போன்ற பிரச்சனை தான் நிலவுகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் பானுகா ராஜபக்ச மற்றும் சமிக கருணாரத்ன சிறிது நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

கடந்த ஜூலை 2019 முதல், வங்க தேச மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளில் உள்ள வீரர்களின் பேட்டிங் சராசரி 20க்கும் குறைவாகவே கொண்டுள்ளனர். மேலும், 115-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், 13க்கும் குறைவான பவுண்டரி சதவீதம் மற்றும் ஒரு போட்டிக்கு நான்கு சிக்ஸர்களுக்கு குறைவாகவே அடித்துள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் இந்த அணிகளில் இருந்து ஒரு பெரிய மறுதொடக்கத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு உதவிகரமாக இருப்பதால், 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். தவிர, சூப்பர் '4' சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இந்த கடைசி லீக் ஆட்டத்தில், வெற்றி சுவைக்க இரு அணிகளும் போட்டி போடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்…

இலங்கை - வங்காளதேச அணிகள் டி-20 கிரிக்கெட்டில், இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இலங்கையும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருக்கிறது.

இரு அணியில் உள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

இலங்கை அணி:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக (கேப்டன்), சமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, தினேஷ் சண்டிமால், தினேஷ் சண்டிமால், எஸ். ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவான் துஷார

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், சபீர் ரஹ்மான், சபீர் ரஹ்மான், சபீர் ரஹ்மான். மிராஸ், எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன்

இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன.

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அபிஃப் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹொசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Live Cricket Score Srilanka Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment