/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1154.jpg)
SL vs WI Live Score, Sri Lanka vs West Indies World Cup Live Score
West Indies vs Sri Lanka World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.1) செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரின் ரிவர் சைட் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.
இவ்விரு அணிகளுமே உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு மூலம் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மழைக்கான வாய்ப்பு – 0%
ஈரப்பதம் – 69%
காற்று – 31km/h
அதிகபட்ச வெப்பநிலை – 18 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை – 10 டிகிரி செல்சியஸ்
இன்றைய ஆட்டத்தின், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.