scorecardresearch

சையத் முஷ்டாக் அலி கோப்பை: 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு!

Tamil Nadu Syed Mushtaq Ali T20 trophy Champion for the 3rd time Tamil News: சையத் முஷ்டாக் அலி கோப்பையை 3வது முறையும், தொடர்ந்து 2வது முறையை தமிழ்நாடு அணி முத்தமிட்டது.

SMAT 2021 final Tamil News: TN beats KA BY 4 wickets and lifts the cup by 3rd time

Syed Mushtaq Ali Trophy 2021 Final Highlights: 13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற இறுதிபோட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதிக்கொண்டன. மிகவும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அந்த அணிக்கு வலுவான தொடக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கையில், தொடக்க வீரர் ரோஹன் கடம் சாய் கிஷோர் பந்தில் சிக்கி அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் மணீஷ் பாண்டே 13 ரன்னிலும், தொடர்ந்து வந்த கருண் நாயர் 18 ரன்னிலும், ஷரத் பிஆர் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கர்நாடகா அணியில் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய அபினவ் மனோகர் 37 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 23 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சேர்த்த பிரவீன் துபே ஆட்டத்தின் கடைசிப்பந்தில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த கர்நாடகா அணி 151 ரன்கள் சேர்த்தது. தமிழக அணி தரப்பில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், சஞ்சய் யாதவ், டி நடராஜன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய தமிழ்நாடு அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள்
ஹரி நிஷாந்த் 23 ரன்னிலும் (12 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர்) என் ஜெகதீசன் 41 ரன்னிலும் (46பந்துகள் 2 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தனர்.

மிடில் ஆடரில் களமிறங்கிய கேப்டன் விஜய் சங்கர் மட்டும் 18 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் ரன்கள் சேர்ப்பதில் சிறிது சுணக்கம் காட்டியது தமிழ்நாடு. அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த முகமது – ஷாருக் கான் ஜோடியில் 18.3வது பந்தில் பவுண்டரியை விரட்டிய முகமது அடுத்த பந்திலே அவுட் ஆனார்.

இதனால் ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. எனினும், அதே ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டார் மறுமுனையில் இருந்த ஷாருக் கான். எனவே, தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு இப்போது 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதற்பந்தை சாய் கிஷோர் பவுண்டரி துரத்த, கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இதனால், பரபரப்பான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. மேலும், சையத் முஷ்டாக் அலி கோப்பையை 3வது முறையும், தொடர்ந்து 2வது முறையை தமிழ்நாடு அணி முத்தமிட்டது. தவிர, 2019ம் ஆண்டில் கர்நாடகாவிடம் கோப்பையை பறிகொடுத்ததற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Smat 2021 final tamil news tn beats ka by 4 wickets and lifts the cup by 3rd time

Best of Express