Advertisment

உள்ளூர் போட்டியில் உலக சாதனை… 4 ஓவரையும் மெய்டன் வீசி மிரட்டிய இந்திய வீரர்…!

Akshay Karnewar creates new record in T20 to concede zero runs after bowling full quota Tamil News: முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரில் மணிப்பூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய விதர்பா அணியின் அக்ஷய் கர்நேவர் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி உலக சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SMAT 2021 Tamil News: Karnewar creates new record in T20 to concede zero runs after bowling full quota

SMAT 2021 Tamil News:13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட்’ என்று அழைக்கப்படும் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் தலா 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. நடப்பு சாம்பியான தமிழ்நாடு அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

Advertisment
publive-image

விதர்பா - மணிப்பூர் அணிகள் மோதல்

இந்நிலையில், இந்த தொடருக்கான நேற்றைய (திங்கள் கிழமை) லீக் ஆட்டத்தில் விதர்பா - மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ரன் மழை பொழிந்தது. அந்த அணியில் அதிகட்சமாக ஜிடேஷ் ஷர்மா 71 ரன்களும் (31 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரி), வான்கடே 49 ரன்களும் (16 பந்துகளில் 6 சிக்ஸர், 1பவுண்டரி), தொடக்க வீரர் அதர்வா டைட் 46 ரன்களும் (21 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரி) குவித்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் விதர்பா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. 223 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய மணிப்பூர் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைவில்லை. அந்த அணியில் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன் ஏதும் சேர்க்கவில்லை. அதிகபட்சமாக யும்னம் 18 (12) ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்டியதால் அந்த அணி 16.3 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 55 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் விதர்பா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விதர்பா வீரரின் உலக சாதனை

விதர்பா அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்து பந்து வீச்சாளர் 'அக்ஷய் கர்நேவர்' முக்கிய காரணம் என்றால் நிச்சயம் மிகையாது. மிகச்சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய அவர் தனது சுழலில் மணிப்பூர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு அக்ஷய் வீசிய 4 ஓவரிகளிலும் 1 ரன்கூட விட்டுக்கொடுக்கவில்லை.

அக்ஷய் கர்நேவரின் இந்த அபார பந்துவீச்சு தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்குமுன், உலகின் எந்த ஒரு பந்துவீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களை வீசிய மெய்டன் விக்கெட் வாங்கியது கிடையாது.

கூடுதல் தகவல்

29 வயதான அக்ஷய் கர்நேவர் மகாராஷ்டிராவின் வகோலியைச் சேர்ந்தவர். தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இரண்டு கைகளிலும் பந்துவீசக் கூடியவர் (right arm off break and left arm orthodox) என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Sports Cricket Indian Cricket Tamil Cricket Update Manipur Syed Mushtaq Ali Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment