ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஐபிஎல் விளையாடத் தடை - பிசிசிஐ அறிவிப்பு

பந்தைச் சேதப்படுத்திய வழக்கில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மர்ம பொருள் கொண்டு ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேன்க்ராஃப்ட் பந்தைச் சேதப்படுத்த, எங்களது வழிகாட்டுதலின் பேரில் தான் அவர் பந்தை சேதப்படுத்தினர் என கேப்டன் ஸ்மித்தும், துணை கேப்டன் வார்னரும் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டு உள்ளது. மேலும், போட்டி ஊதியத்தில் 100%, பேன்க்ராஃப்ட்டுக்கு 75% பிடித்தம் செய்யவும் ஐசிசி உத்தரவிட்டது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம் அவர்கள் இருவரையும் அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஓராண்டு தடை செய்தது. இதில் பந்தை சேதப்படுத்திய பேன்க்ராஃப்ட்டிற்கு 9 மாதங்கள் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய கிரிகெட் வாரியமும் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்மித் மற்றும் வார்னர், எந்த ஐ.பி.எல் போட்டியிலும் ஓராண்டு விளையாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஸ்மித் மற்றும் சன் ரைஸர்ஸ் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளனர்.

×Close
×Close