Advertisment

அடி, சரவெடி… ஃபிரான்சைஸ் கிரிக்கெட்கள் ஸ்மிருதியின் டி-20 ஷாட் தேர்வுக்கு உதவியது எப்படி?

Smriti Mandhana shared how experience of playing in the franchise cricket will help her to become a better T20I cricketer Tamil News: ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம், தான் ஒரு சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக மாற எப்படி உதவியது என்பது பற்றி இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Smriti Mandhana on how franchise cricket helped her to add more shots in T20Is

India's Smriti Mandhana hits the winning runs. (Reuters)

Smriti Mandhana Tamil News: சமீபகாலமாக ஸ்மிருதி மந்தனா (26) டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரோக்குகளை விளையாட விரும்புகிறார். அவ்வகையில், கடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை 31ம் தேதி) பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த காமன்வெல்த் போட்டியில் அவர் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். மேலும், 8 பவுண்டரிகளை ஓட விட்டிருந்த அவர் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டி இருந்தார்.

Advertisment

இந்த ஆட்டத்தில் மழையின் குறுக்கிடால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை இந்தியா 99 ரன்னில் சுருட்டியது. தொடர்ந்து 100 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிரடித் தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா அணி வெற்றி பெற உதவியிருந்தார்.

ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் ‘தி ஹன்ட்ரெட்' தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காகவும், மகளிருக்கான பிக் பாஷ் லீக் (WBBL) தொடரில் சிட்னி தண்டர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் உடனான ஒரு நேர்காணலில் பேசிய ஸ்மிருதி, ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் தான் ஒரு சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக மாற எப்படி உதவியது என்பது பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

"என்னைப் பொறுத்தவரை, பவர்-ஹிட்டிங் என்பது கிரிக்கெட்டின் மற்றொரு பிராண்ட். இன்றைய கிரிக்கெட்டில் உங்களுக்கு அது தேவை. டி20 போட்டிகளில் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். ஒரு தொடக்க ஆட்டக்காரராக, நீங்கள் பவர்பிளேயை அதிகம் பயன்படுத்தி உங்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அடுத்த 12 மாதங்களில் நாங்கள் விளையாடவிருக்கும் டி20 கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு சமீப காலங்களில் நான் உழைத்திருப்பது இதுதான்.

முன்பு, நான் என் நேரத்தை நம்பியிருந்தேன். ஏனென்றால் என்னிடம் அதிக சக்தி இல்லை. என்னைப் பொறுத்தவரை, பவர்-ஹிட்டிங் என்பது கிரிக்கெட்டின் மற்றொரு பிராண்ட். ஒரு குறிப்பிட்ட ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற ஒருவருக்கு சக்தி தேவையில்லை என்று நான் நினைத்தேன். நேரத்தைக் கொண்டும் நீங்கள் விரைவான ரன்களை எடுக்கலாம். மேலும், புத்திசாலித்தனமாக விளையாடுவது மற்றும் களத்தை கையாளுவது அதில் குறிபிடத்தக்கது. ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஷஃபாலி வர்மா போன்றவர்கள் வேடிக்கைக்காக சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கும்போது, ​​நான் செய்ததை விட அதிக ஷாட்களை விளையாட அது என்னைத் தூண்டியது." என்று ஸ்மிருதி மந்தனா கூறியிருந்தார்.

கடந்த 18 மாதங்களில், ஒரு பயோ-பப்பில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதைத் தவிர, ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) மற்றும் 'தி ஹன்ட்ரட்' ஆகியவற்றில் ஸ்மிருதி தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். தொடர்ந்து அவரது நேர்காணலில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் நெட் சேஷன்கள் இந்தியாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், அதில் இருந்து எவ்வளவு பயன்கள் கிடைத்தன என்பது பற்றியும் பேசியிருந்தார்.

"நீங்கள் உங்கள் உள்நாட்டு அணியுடன் விளையாடினாலும் அல்லது தேசிய அணியுடன் விளையாடினாலும் நெட் சேஷன்கள் அணிக்கு அணி மாறுபடும். ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில், நான் கவனித்தது என்னவென்றால், அவர்கள் திறமைகளை (ஸ்கில்ஸ்) விட அதிக உடற்பயிற்சி சேஷன்களை செய்கிறார்கள். அவர்களின் திறன் அமர்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் இருக்கும் போது நாங்கள் உடற்பயிற்சி மற்றும் திறன் அமர்வுகளில் சமமாக கவனம் செலுத்துகிறோம்." என்று அவர் கூறியிருந்தார்.

இந்திய மகளிர் அணி சர்வேதேச தொடர்களில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல், ஒரு வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தொடக்க ஜோடிகளான ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஆகியோரின் ஆட்டம், உலகிலேயே அதிக தாக்குதல் நடத்தும் தொடக்க ஜோடியாக உருவெடுத்துள்ளது. காமன்வெல்த் தொடரில் நடந்த 2 ஆட்டங்களிலும் இந்த ஜோடி மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அற்புதமான டெம்ப்ளேட் ஆகவும் உள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

England Sports Cricket Indian Cricket Team Indian Cricket Australia Smriti Mandhana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment