கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமானிய மனிதர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் வேலை செய்யும் இடம் பெயர்ந்தவர்கள் என்று பலரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவர்களுக்கான பேக்கேஜ்களை அறிவித்தார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நடிகர்கள், நடிகைகள், தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்துள்ளனர். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 26 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார், ஒருவர் குணமாகி வீடு சென்றுள்ளார்.
சாமானிய மக்கள் பசியாறும் வகையில் பி.சி.சி.ஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி ரூ. 50 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்க முன் வந்துள்ளார். அரிசியை ஏழைகளுக்கு வழங்க லால் பாபா ரைஸ் என்ற நிறுவனம் முன் வந்துள்ளது. இவரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. இவர் மட்டுமில்லாமல் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 லட்சம் நிதி உதவியை வழங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சத்தை நிதி உதவியாக அளித்துள்ளார்.