Sourav Ganguly Health News Updates: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி, தனது வீட்டு டிரெட்மில்லில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது இதய நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலிக்கு முதன்மை இதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனை எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரூபாலி பாசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இதய நோய் கொண்ட குடும்ப வரலாறு கொண்டவர். மதியம் 1 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பின்பு, dual anti-platelets மற்றும் statin சிகிச்சை முறை வழங்கப்பட்டது. இதயத் துடிப்பு நொடிக்கு 70 ஆகவும், இரத்த அழுத்தம் 130/80 என்ற வரம்பிலும் உள்ளன. அவர் உடல்நில தற்போது சீராக உள்ளது,”என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .
“நேற்று இரவில் இருந்தே அவரின் உடல்நிலை சரியில்லை. எவ்வாறாயினும், இன்று காலை வழக்கமாக தனது பணியைத் தொடர்ந்தார். திடீரென்று மயக்கம் ஏற்பட்டது ”என்று மருத்துவமனை வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
கங்குலியின் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே சிறப்பு மருத்துவக் குழுவை உருவாக்கியுள்ளது. "இரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் சில அடைப்புகள் இருந்தன. ஆஞ்சியோகிராஃபி செய்யப்படும். ஆஞ்சியோபிளாஸ்டி வழியாக சிகிச்சை மேற்கொள்ளப்படும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது ”என்று இதய நிபுணர் சரோஜ் மொண்டோல் கூறினார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கங்குலி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கங்குலி நலமுடன் உள்ளார். நேரில் சந்தித்தேன், சிறிது நேரம் உரையாடினார்" என்று தெரிவித்தார்.
முன்னதாக தனது ட்விட்டர் பதிவில், " கங்குலி இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைக் கேட்டு வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன். விரைவில் நலம் பெறுவார்! ”என்று பதிவிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கியவர்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். இதன் காரணமாக இவரை, காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுவதுண்டு.
2019 அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலிக்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.