இந்த ஆண்டு ஐ.பி.எல் டாப் 5 வீரர்கள் இவங்கதான்… 'தாதா' பட்டியலில் முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்
அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் பெரிய இடத்தைப் பிடிக்கும் ஐந்து இளம் வீரர்களின் பெயரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Sourav Ganguly has named five youngsters who, according to him, will make a big name in the IPL in the next five years tamil news
Sourav Ganguly on IPL players Tamil News: 16 வது ஐ.பி.எல் (2023) டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை உறுதி செய்து பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் பெரிய இடத்தைப் பிடிக்கும் ஐந்து இளம் வீரர்களின் பெயரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Advertisment
இருப்பினும், கங்குலி வெளியிட்டுள்ள 5 வீரர்களின் பெயர்களில் சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்), மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) போன்ற வீரர்களின் பெயர் இல்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக ஐ.பி.எல் தொடரில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளனர். அதே வேளையில், இஷான் கிஷன் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.
இந்த மூவருக்குப் பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஜோடியான பிருத்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், குஜராத் டைட்டன்ஸ் பேட்டர் ஷுப்மான் கில் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோரின் பெயரை கங்குலி கூறியுள்ளார். இந்த ஐவரைத் தவிர, மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவையும் சேர்த்து அவருக்கு சிறப்புக் குறிப்பு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, "சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் உள்ளார். வெளிப்படையாக, நீங்கள் அவரை இனி இளைஞராகக் கருத வேண்டியதில்லை, ஆனால் இளம் வீரர்களில், பிருத்வி ஷாவுக்கு நிறைய திறமைகள் உள்ளன. டி20 வடிவத்தில் சிறந்த வீரராக அவர் உள்ளார். அவருடன் நம்பர் 2 இடத்தில் ரிஷப் பண்ட் உள்ளார். உலக கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். ருதுராஜ் கெய்க்வாட் எப்படி தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். உம்ரான் மாலிக், ஒருவேளை, அவர் ஃபிட்டாக இருந்தால், அவரது உண்மையான வேகத்தின் காரணமாக ரசிகர்களை விளையாட்டில் ஆர்வமாக வைத்திருப்பார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கும் இருந்தார். அவர் தனது முன்னாள் கேப்டனிடம், "தாதா, சுப்மான் கில் எப்படி?" என்று கேட்டார். அதற்கு கங்குலி, "ஆம் சரியாக, அந்த பெயர்தான் என் மனதில் நழுவியது. ஆனால் எனது ஐந்தாவது வீரர் ஷுப்மான் கில் என்று நான் நினைக்கிறேன். எனவே, ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், சூர்யா ஒருவேளை பட்டியலில் முன்னணியில் இருப்பார். அவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட், உம்ரான் மாலிக் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரும் உள்ளனர்." என்றார்.
The countdown to the Indian Premier League is on, and #SouravGanguly has revealed his favourite young guns who will make the #TataIPL bigger and better! 🏏
இந்திய இளம் வீரரான கில் தற்போது ரெட்-ஹாட் ஃபார்மில் இருக்கிறார். 2023ல் இதுவரை விளையாடிய 12 ஒயிட்-பால் போட்டிகளில், அவர் நான்கு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார். எனவே, இந்த ஐ.பி.எல்-ல் அவர் ரன் வேட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.