Advertisment

'பெங்கால் டைகர்'… 'கல்கத்தாவின் இளவரசர்': கங்குலியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 700 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sourav ganguly net worth in tamil

Happy Birthday Sourav Ganguly Tamil News: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் சண்டிதாஸ் கங்குலி இன்று (ஜூலை 8, 2023) தனது 51 வது பிறந்தநாளை கொண்டுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992ம் ஆண்டில் அறிமுகமான இவர் 113 டெஸ்ட் போட்டிகளில் 42.18 சராசரியில் 7,212 ரன்களையும், 311 ஒருநாள் போட்டிகளில் 40.73 சராசரியில் 11,363 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதம், 35 அரைசதங்களும், ஒருநாள் போட்டிகளில் 22 சதம் மற்றும் 72 அரைசதங்களை விளாசியுள்ளார்.

Advertisment

கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் மிக முக்கியமானவராக திகழ்கிறார். திறமையான ஆனால் அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு சிறப்பான அணியை கட்டமைத்தவர். அதனால் அவரை இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று கூறினால் யாராலும் மறுக்க முடியாது.

2000 ஆம் ஆண்டில் மேட்ச் பிக்சிங் ஊழலைத் தொடர்ந்து கல்கத்தாவின் இளவரசரான கங்குலி கேப்டனாகப் பொறுப்பேற்றார். அப்போது ​​அவர் ஒரு கடினமான மற்றும் கட்டுப்பாடற்ற தலைவராக தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார். அவரது தலைமையினான இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கியது.

publive-image

2008ம் ஆண்டில் இந்திய அணியில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், அதே ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முதல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வழிநடத்தும் வாய்ப்பு கங்குலிக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2011ல், அவர் புனே வாரியர்ஸ் அணியில் இருந்தார். ஐ.பி.எல் தொடரில் 59 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 1349 ரன்களை குவித்துள்ளார்.

கங்குலி நீண்ட காலத்திற்கு முன்பே தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவரது பிரபலம் அவரை பிராண்டுகள் மத்தியில் ஈர்ப்பவராக இருக்க உதவியது. முன்னாள் பிசிசிஐ தலைவரான அவர் தற்போது பல பிரபலமான பிராண்டுகளுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில் அவரது பிறந்தநாளில் அவரது ஒப்பந்தங்கள், சொத்து மதிப்பு, முதலீடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

publive-image

ஒப்பந்தங்கள்

மற்ற ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், கங்குலி மற்றும் மற்றொரு முன்னாள் இந்திய கேப்டனான எம்.எஸ். தோனி ஆகியோர் அதிக ஒப்புதல் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர்.

கடந்தாண்டில் கங்குலி மேன்கைண்ட் பார்மா, திரிபுரா சுற்றுலா, ராணா குழுமம், ரிச் மேரி, பந்தன் வங்கி, ஆக்டிவ் ஏ.ஐ, மைலெவன் சர்க்கிள், சென்கோ தங்கம் மற்றும் டயமண்ட்ஸ், லக்ஸ் கோசி மற்றும் ட்ரீம்செட்கோ ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதனுடன், விக்கோ, லாயிட், டாக்டர் ரேசஸ், கிளாஸ்பிளஸ், கோகோ கோலா இந்தியா, ஜாய்வில்லே ஷபூர்ஜி ஹவுசிங் மற்றும் பல முன்னணி பிராண்டுகளுடனும் அவர் கைகோர்த்துள்ளார்.

சொத்து மதிப்பு

கங்குலியின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 700 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. அவரது பல முதலீடுகள், பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.பி.எல் வருமானம் அவருக்கு குறிப்பிடத்தக்க நிதி வெற்றியை அடைய உதவியது. அவர் தற்போது தனது மனைவி டோனா மற்றும் அவர்களது மகள் சனாவுடன் கொல்கத்தாவில் ஒரு ஆடம்பரமான, ஸ்டைலான வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு 7 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

publive-image

கங்குலி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான ரியல் எஸ்டேட் முதலீடுகளை செய்துள்ளார். இவரிடம் விலை உயர்ந்த வாகனங்களும் உள்ளன. பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ 7, பிஎம்டபிள்யூ எக்ஸ்4 மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகியவை உள்ளன.

முதலீடுகள்

கங்குலி சமீபத்தில் உணவு விநியோக நிறுவனமான ஜஸ்ட் மாய் ரூட்ஸ் நிறுவனத்தில் (JustMyRoots) சிறிய அளவில் முதலீடு செய்துள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராகச் செயல்படும் போது, ​​இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) உரிமையாளரான மோகன் பாகன் சூப்பர் ஜெயன்ட்ஸின் இணை உரிமையாளராகவும் இருந்தார். ஆனால் அந்த கிளப்பின் உரிமையாளாரான சஞ்சீவ் கோயங்கா ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (LSG) அணியை ஏலத்தில் வாங்கியதால், கங்குலி அந்தப் பதவியில் இருந்து 2021ல் விலகினார்.

publive-image

2014ல், சவுரப் சிங், ராகுல் ஜெயின் மற்றும் நாகேந்திர சங்கரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமான ஃப்ளிக்ஸ்ட்ரீ நிறுவனத்தில் (Flickstree) கங்குலி முதலீடு செய்துள்ளார். 2020 ஆம் ஆண்டில், ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் திறம்பட தொடர்பு கொள்ள உதவும் எட்டெக் வணிகமான க்ளாஸ்ப்ளஸ் நிறுவனத்திலும் (Classplus) அவர் மேலும் முதலீடு செய்திருக்கிறார்.

தொண்டு

publive-image

கொரோனா தொற்றுநோய்களின் போது கொல்கத்தாவில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கங்குலி 50 ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை வழங்கினார். கூடுதலாக, அவர் கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்திற்குச் சென்று, ஆதரவற்றவர்களுக்கு 2000 கிலோ தானியங்களை வழங்கி இருந்தார். மேலும், மறைமுகமாக அவர் இன்னும் தொண்டுகளை செய்து வருகிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket Bcci Sourav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment