அநேகமாக இந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாதா சவுரவ் கங்குலி, சேவாக்கிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கலாம்.
2003 உலகக் கோப்பை, என்றும் ரசிகர்களின் பேவரைட் வேர்லடு கப் எனலாம். கங்குலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்தியாவை பெருமைப்படுத்தியது. லீக் போட்டி, இறுதிப் போட்டி என அத்தொடரில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் இந்தியா தோல்வி அடைந்தது. மற்ற அனைத்து அணிகளையும் தெறிக்கவிட்டு, இறுதிப் போட்டி வரை நடைபோட்டது தாதா படை.
அதேபோல், 2019 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய கோலி டீம், நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து உலகக் கோப்பை வாய்ப்பை பறிகொடுத்தது. உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதல் அணியாக திகழந்த கோலி அணி, அதிர்ஷடம் இன்றி தோல்வி அடைந்து வெளியேறியது.
ECE படித்தால் கிராண்ட் மாஸ்டர் கூட ஆகலாம் - ரோல் மாடலான சென்னை பையன்
இந்நிலையில், பிசிசிஐ-யின் டாக் ஷோவான ‘DadaOpensWithMayank’ எனும் மாயங்க் அகர்வால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் கங்குலியிடம் சுவாரஸ்ய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
அதில், "2019 உலகக் கோப்பை அணியில் இருந்து மூன்று வீரர்களை 2003 அணிக்கு கொண்டுச் செல்ல விரும்பினால் யாரைத் தேர்வு செய்வீர்கள்? அதற்கு காரணமும் சொல்ல வேண்டும்" என்று கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த கங்குலி, 2019 அணியில் இருந்து ரோஹித், கோலி, மற்றும் பும்ராவை எனது அணிக்கு கொண்டுச் செல்வேன். தென்னாப்பிரிக்கா கண்டிஷனில், பும்ராவின் பந்துவீச்சு எங்களுக்கு கண்டிப்பாக பெரிய அளவும் கைக்கொடுக்கும். ரோஹித் டாப் ஆர்டரில் களமிறங்குவார். நான், மூன்றாவது வீரராக விளையாடுவேன். சேவாக் இந்த செய்தியை படிப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை வாசித்தால், நாளை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று என்னிடம் கேள்வி எழுப்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.
'2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்' - பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா?
மேலும், தோனியையும் எனது அணியில் எடுத்துக் கொள்வேன். ஆனால், நீங்கள் மூன்று வீரரை மட்டுமே தேர்வு செய்ய ஆப்ஷன் கொடுத்ததால், எனது முதல் மூன்று சாய்ஸ் இவர்கள் தான். ஏனெனில், விக்கெட் கீப்பிங்கில் நான் ராகுல் டிராவிட்டை வைத்தே சமாளித்துவிடுவேன். அவர் அந்த உலகக் கோப்பையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”