Advertisment

'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' - தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ms dhoni, sourav ganguly, dhoni birthday, cricket news, sports news, தோனி, கங்குலி, கிரிக்கெட் செய்திகள்

ms dhoni, sourav ganguly, dhoni birthday, cricket news, sports news, தோனி, கங்குலி, கிரிக்கெட் செய்திகள்

'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' என்று தோனி ஒரு விளம்பரத்தில் நடந்துக் கொண்டே சொல்லக் கேட்டிருப்போம். 2007 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியின் இறுதி ஓவரை, ஜோகிந்தர் ஷர்மாவுக்கு கொடுத்து, அதை வெற்றியாகவும் மாற்றிய தோனியின் மேஜிக்கை கான்செப்ட்டாக வைத்து எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், தோனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்.

Advertisment

ஆனால், இந்த ஐடியாக்களின் வித்து நம்ம தாதா கங்குலி என்றால் தட்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங் தானே!. ஆம், தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்தவர் கங்குலி. இவரது தலைமையில் தான் தோனியின் பேட் சர்வதேச பந்துகளை டச் செய்யத் தொடங்கியது. லோ ஆர்டரில் அறிமுகம் செய்யப்பட்ட தோனி, பந்துகளை டச், டிச் மட்டும் செய்துக் கொண்டிருக்க, அவரை பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒன் டவுன் இறக்கிவிட்டு, முதன் முறையாக தோனியின் பேட்டிற்கு பந்துகளை டீல் செய்ய வாய்ப்பளித்தார்.

ஃபினிஷர் தோனி தெரியும்; ஓப்பனர் தோனி தெரியுமா? - அந்த அடி எப்படி இருக்கும் தெரியுமா? (வீடியோ)

அன்று, கங்குலி ஒருவேளை அப்படி, 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' பாணியில் யோசிக்காமல் போயிருந்தால், 20 ரன்களை கூட அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த தோனிக்கு, அதன் பிறகு கிரிக்கெட்டில் வாய்ப்பே அளிக்கப்படாமல் போயிருக்கலாம்.

அதன் பின், தோனி 'தல'யாக உருவெடுத்து இந்திய கிரிக்கெட்டை ஆட்சி புரிந்தது எல்லாம் வேற கதை.

இன்றும் நாம் இவரை உலகின் பெஸ்ட் ஃபினிஷர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், கங்குலி மட்டும் என்ன சொல்கிறார் தெரியுமா? தோனி மட்டும் தொடக்க வரிசையில் களமிறங்கி இருந்தால், இந்நேரம் பல முன்னணி வீரர்களின் ரெக்கார்டுகள் தகர்க்கப்பட்டிருக்கும். இந்தியா ஒரு பெஸ்ட் பினிஷரை கணடறிந்தாலும், ஒரு அபாயகரமான ஓப்பனரை இழந்து விட்டது என்கிறார்.

தோனியின் பிறந்தநாளுக்கு, இன்று உலகமே அவருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்க, கங்குலியும் தன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதோடு சில கருத்துகளையும் ஷேர் செய்திருக்கிறார்.

“தோனி உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர், அவர் ஒரு பினிஷர் மட்டுமல்ல. எல்லோரும் அவர் பினிஷிங் முறையைப் பற்றி பேசுகிறார்கள். அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதால் அவர் டாப் ஆர்டரில் பேட் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன்"

ENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தை நீங்கள் பார்த்தால், சிறந்த வீரர்கள் தொடர்ந்து பிரஷரின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றனர். எம்.எஸ். தோனி அவர்களில் ஒருவர், அதனால்தான் அவர் ஸ்பெஷல்.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர் நம்பமுடியாதவர்" என்று தான் அறிமுகம் செய்த சிஷ்யனின் அபார ஆளுமையை புகழந்து பேசினார் தாதா கங்குலி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Mahendra Singh Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment