Advertisment

SA vs BAN Live Score: முகமதுல்லா சதம் வீண் : 149 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பையில் நடக்கும் 23-வது லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

author-image
WebDesk
New Update
South Africa vs Bangladesh Live Score updates World Cup 2023 in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதல்

worldcup 2023 | South Africa vs Bangladesh | mumbai: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதியது

Advertisment

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் - வங்கதேசம் பவுலிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் -  ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி களமிறங்கிய நிலையில், ஒரு பவுண்டரியை விரட்டிய ஹென்ட்ரிக்ஸ் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் இருந்த குயின்டன் டி காக் - கேப்டன் ஐடன் மார்க்ரம் ஜோடியில், டி காக் 47 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து, 57 பந்துகளில் ஐடன் மார்க்ரம் அரைசதம் அடித்தார். 

இந்த ஜோடி மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், 7 பவுண்டரிகளை மட்டும் விரட்டிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனால், குயின்டன் டி காக் உடன் ஹென்ரிச் கிளாசென் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் டி காக் 100 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்ந்த நிலையில், அதிரடியாக விளையாடிய டிகாக் 174 (140 பந்து 15 பவுண்டரி 7 சிக்சர்) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மில்லர் க்ளாசனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளாசன் சதத்தை நெருங்கியபோது, 49 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்சருடன் 90 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் மில்லர் 15 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 34 ரன்கள் குவிக்க நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்தது. மார்க் ஜென்சன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி தரப்பில், ஹாசன் மெக்மத் 2 விக்கெட்டுகளும், சாஹிப் அல் ஹசன், மெஹந்தி ஹசன், இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து 383 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் டன்சிடு ஹாசன் 12 ரன்களுக்கும், சிறிது நேரம் தாக்குபிடித்த லிட்டன் தாஸ் 22 ரன்களுக்கும், விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நஜிமுல் ஹோசயின் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஷாகில் அல் ஹாசன் 1 ரன்னுக்கு, முஷ்பிகூர் ரஹ்மான் 8 ரன்னுக்கும், மெஹடி ஹாசன் மிஸ்ரா 11 ரன்களுக்கும் வெளியேறிய நிலையில், வங்கதேச அணி 81 ரன்களுக்கு முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து 7-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமதுல்லா, நசூம் அகமது இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் முகமதுல்லா கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விராட்டி அரைசதம் கடந்தார். 

மறுபுறம் நசூம் அகமது 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹாசன் மகமுத் 15 ரன்களில் வெளியேறிய நிலையில், அதிரடியாக விளையாடி சதமடித்த முகமதுல்லா 11 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து முஸ்தாபிசூர் ரஹ்மான் 11 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து வங்கதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி இந்த உலககோப்பை தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்துது. இந்த 4 வெற்றியுமே 100 ரன்களுக்கு மேல் வித்தியாத்தில் கிடைத்த அபார வெற்றியாகும் தென்ஆப்பிரிக்க அணி தரப்பில், காடஸி 3 விக்கெட்டுகளும், ஜென்சன், வில்லியம்ஸ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் சேவ் மகராஜ் ஒரு விக்கெட்டும். வீழ்த்தினர். 

இதன் மூலம் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs Bangladesh Live Score, World Cup 2023

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி ஒரு அணி குறைந்தது 7 போட்டிகளை வெல்ல வேண்டும். ஏற்கனவே 3ல் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று 4-வது வெற்றியை பதிவு செய்தது. முந்தை போட்டியில் இந்தியாவிடம் அடி வாங்கிய வங்கதேசம் தற்போது தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Mumbai South Africa vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment