worldcup 2023 | South Africa vs srilanka: இந்தியாவில் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 4-வது லீக்கில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இலங்கை பவுலிங் - தென்ஆப்பிரிக்கா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ஸி வான்டெர் டுசென் தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் சிறப்பான ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் விளாசி அடித்து மிரட்டினர். தங்களது அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார் டி காக். ஆனால், அடுத்த பந்திலே மதீஷ பத்திரன பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடன் ஜோடியில் இருந்த வான்டெர் டுசெனும் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 பந்துகளில் 13 பவுண்டர்கள், 2 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் களத்தில் அமைத்த ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி மிரட்டினார்.
ஐடன் மார்க்ரம் 54 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் களத்தில் இருந்த டேவிட் மில்லர் 39 ரன்களும், மார்கோ ஜான்சன் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. இதனால், இலங்கை அணிக்கு 428 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா உலக சாதனை
இதன் மூலம் உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமை தென்ஆப்பிரிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா அணி 417 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி உலககோப்பை தொடரில் 3-வது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
428 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசங்கா, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர். முதல் ஓவரில் இலங்கை அணிக்கு 1 ரன் கிடைத்த நிலையில், 2-வது ஓவரை வீசிய மார்க்கோ யான்சன் முதல் பந்தில் நிசங்காவை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய குஷால் தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.
குஷால் மெண்டீஸ் அதிரடி
அதிரடியாக ஆடிய அவர், 24 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சருடன் அரைசதம் கடந்த நிலையில், மறுபுறம் மந்தமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா, 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சமரவிக்ரமாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சிக்சர் மழை பொழிந்த குஷால் மெண்டீஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரி 8 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அசலங்கா களமிறங்கிய நிலையில், சிறப்பாக விளையாடிய சமரவிக்ரமா 19 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வவந்த தனன்ஜெயா டிசில்வா 11 ரன்களில் ஆட்டமிழந்ததார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா அவ்வப்போது பவுண்டரி அடித்து அசத்திய நிலையில் 46 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
ஒருபக்கம் கேப்டன் ஷானகா போராடிய நிலையில், மறுபுறம் பதிரான 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த கேப்டன் ஷானகா, 62 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அசத்திய ரச்சிதா 31 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 400 ரன்களை கடந்து தென்ஆப்பிரிக்க அணி சாதனை படைத்த நிலையில், இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில் 754 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அசலங்கா அவுட்
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா, 65 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துனித் வெல்லலாகே ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார். அடுத்
இலங்கை: குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித
தென்ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.