Suryakumar Yadav Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவர் சிறந்த பேட்டிங்கை கொண்டுள்ளார் என்று நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் வாதிடலாம். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் டாப் ஆடரிலும், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஃபினிஷர்களாகவும் உள்ள நிலையில், சூர்யகுமார் மிடில் -ஆடரில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.
சூர்யகுமாரைப் பொறுத்தவரை, அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்திலும் குறைந்தது இரண்டு வித்தியாசமான ஷாட்களை அடித்து விடுவார். நீங்கள் அவருக்கு வெளியே பந்துவீசினால், அதை அவர் கவருக்கு மேல் பறக்க விடுவார். அல்லது தேர்ட்மேனுக்கு அருகில் விரட்டி விடுவார். அவருக்கு பவுன்சரை வீசினால், அதை அவர் ஃபைன் சைடில் அடித்து விடுவார். அல்லது அவர் வழக்கத்திற்கு மாறான ஆனால் திறமையான பொஷிசனியில் இருந்தவாறு ‘நடராஜா ஷாட்டை’ அடிப்பார்.

ஒருவேளை நீங்கள் அவரை சுழல் வலையில் சிக்க வைக்கலாம் என நினைத்தால், அந்த மாய வலையை தனது அசாத்திய பேட்டிங்கால் தகர்த்துவிடுவார் சூர்யா.
சூர்யகுமார் கடந்த 2019 ஆம் ஆண்டில் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில், தற்போது வரை அவர் 176.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 1045 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஃபார்மேட்டில், பேட்டிங்கில் நம்பர்.4 அல்லது அதற்குக் கீழே களமிறங்கிய எந்தவொரு இந்திய வீரரும் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. கடந்த காலங்களில், தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ்
இந்நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் குறித்து பேசியுள்ள தென்ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டெய்ன், அவரை தனது சக வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான ‘கிரிக்கெட் லைவ்’ நிகழ்ச்சியில் பேசிய ஸ்டெய்ன், “சூர்யகுமார் பந்தின் வேகத்தைப் பயன்படுத்த விரும்பும் ஒரு வகையான வீரர். அவர் ஸ்கொயருக்கு பின்னால் செல்ல விரும்புகிறார். பெர்த், மெல்போர்ன் போன்ற இடங்களில், இந்த மைதானங்கள் அனைத்திலும், கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கொண்டது. எனவே, நீங்கள் வேகத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஃபைன் லெக்கில், பின்புறம் மற்றும் ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்கலாம். மேலும் அவர் பேக் ஃபுட்டில் மற்றும் நின்ற இடத்தில் இருந்து மட்டையைச் சுழற்றுவதில் சிறந்தவராக இருக்கிறார். அவர் சில அற்புதமான பேக் ஃபுட் கவர் டிரைவ்கள் மற்றும் சில அழகான ஃப்ரண்ட் ஃபுட் கவர் டிரைவ்களை விளையாடியுள்ளார்.
எனவே, அவர் ஒரு ஆல்-ரவுண்ட் வீரர் என்று கூறலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில், அங்கு ஆடுகளம் மிகவும் நன்றாக உள்ளன. அவை பேட்டிங்கிற்கு நட்பானவை. ஒரு பந்து வீச்சாளர் ஃபுல் டாஸ் வீசினால் அந்த பந்தை நீங்கள் அதிரடியாக வெளியே பறக்க விடலாம். இடது புறத்தில் வீசப்படும் பந்துகளின் வேகத்தை அற்புதமாக நீங்கள் பயன்படுத்தலாம்.
அதனால், அவர் ஒரு அற்புதமான 360-டிகிரி வீரர், மேலும் எனக்கு ஏபி டி வில்லியர்ஸை நினைவுபடுத்துகிறார். அவர் நிச்சயம் இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ். அவர் இருக்கும் ரெட்-ஹாட் ஃபார்மை பார்க்கும் போது, அவர் இந்த டி-20 உலகக் கோப்பையில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய வீரராக இருக்கிறார்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil