Advertisment

ஸ்பெயின் வீராங்கனைக்கு 'உதட்டில் முத்தம்': வெடித்த சர்ச்சை… மன்னிப்பு கேட்ட சங்க தலைவர்!

ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் தனது அணியின் வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Spain's Rubiales apologises for kissing Jenni Hermoso FIFA Women's World Cup Tamil News

ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்தார். பின்னர் அந்த வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்டார்.

9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. இதில், நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சாய்த்த ஸ்பெயின் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டது.

Advertisment

இந்தப் போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

தொடர்ந்து, முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்தார். பின்னர் அந்த வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்த நிலையில், ருபியாலெஸ் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை அமைச்சர் ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் 'மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் கண்டித்தனர்.

இதனையடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா சார்பில் ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'உலகக் கோப்பையை வென்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென இயல்பாக நடந்த விஷயம் அது. எனக்கும் சங்க தலைவர் ருபியாலெசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வீராங்கனைகளிடம் எப்போதும் அவர் கண்ணியமுடன் நடந்து கொள்வார்' என்று கூறியிருந்தார்.

இருப்பினும், கால்பந்து வீராங்கனையை முத்தமிட்ட விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் நேற்று மன்னிப்பு கோரினார். இது குறித்து பேசிய அவர், 'நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்.' என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Spain Football Team Football Fifa World Cup Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment