கொட்டிக் கிடக்கும் தமிழர் விளையாட்டுகள்!

நமது முன்னோர்களே உருவாக்கிய பல விளையாட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன

By: September 18, 2018, 1:50:45 PM

ஆசைத்தம்பி

விளையாட்டு என்பது மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தி புத்துணர்ச்சியாக்கவும் விளையாட்டு துணை புரிகிறது. இன்று நமது நாட்டில் விளையாடப்படும் விளையாட்டில் கிரிக்கெட் தான் பெரும்பாலானோரின் சாய்ஸாக உள்ளது. இங்கிலாந்தின் தேசிய விளையாட்டு தான் நம்மவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக உள்ளது. அது அவரவர் விருப்பம் என்றாலும், கிரிக்கெட் மட்டுமே பெரும்பான்மையாக ஆக்கிரமிப்பது வேதனையான விஷயமே.

இதனால் மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் கூட, நமது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் கிரிக்கெட் பக்கமே திரும்பிவிடுகின்றனர். பலரும் கிரிக்கெட் களத்தை நோக்கி நகர்வதால், அதற்கான போட்டியும் அதிகமாகிவிட்டது.

இதுவொருபுறம் இருந்தாலும், நம் தமிழ் மண் சார்ந்த விளையாட்டுகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள நிறைய சங்கதிகள் இருக்கிறது. நமது முன்னோர்களே உருவாக்கிய பல விளையாட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்ப்போம்,

தமிழர்களின் வெளிக்கள (Outdoor) விளையாட்டுகள்:

ஓணப்பந்து விளையாட்டு
கிட்டிப் புள்ளு
கிளித்தட்டு, தாச்சி
சடுகுடு/கபடி
எட்டுக்கோடு
வழுக்கு மரம் ஏறுதல்
கயிறு இழுத்தல்
முட்டி உடைத்தல்/உறியடி
பாரிவேட்டை [3] சங்கீதக் கதிரை
கிளி கோடு பாய்தல்
போர்த்தேங்காய்
பல்லாங்குழி
ஒப்பு
இரட்டை மாட்டுப் பந்தயம்
மோடி விளையாட்டு
கண்ணாமூச்சி (Hide & Seek)
குழை எடு
பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து
அம்பெறிதல்
கோழிச்சண்டை
வண்டிச்சவாரி
சில்லிக்கோடு
இளவட்டக் கல்
கீச்சு மச்சுத் தம்பலம்
போளையடி
வெள்ளமடித்தல்
சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்
கயிறடித்தல்
கப்பல் விடுதல், தோணி விடுதல்
குலை குலையாய் முந்திரிக்காய்
தேர்கட்டி விளையாட்டு
உப்பு மூட்டை
எறி பந்து
தும்பி விளையாட்டு
தொப்ப விளையாட்டு
எல்லே எல்லே
ஆடு வீடு
ஊஞ்சல்
தணையடி அடி
புளியடி புளியடி
ஒப்பு விளையாட்டு
மரமேறல்
நீந்தல்
ஆறுதல் ஈருருளி ஓட்டம்
சாக்கு ஓட்டம்
புளிச்சல்
தலையணைச் சண்டை
கள்ளன் காவல்
பச்சைக் குதிரை
காற்றாடி
எலியும் பூனையும்
தட்டா மாலை
சில்லுக் கோடு
கொழுக்கட்டை
பட்டம்
பூசணிக்காய் (விளையாட்டு)
ஓடிப் பிடித்தல்/அடிச்சுப் பிடித்தல்
ஒளித்துப் பிடித்தல்
கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு
கண்கட்டி ஓட்டம்
கயிறு பாய்தல்
சமநிலை பேணுதல்
கிடுகு பின்னுதல்
ஊசி நூல் கோர்த்தல்
மரம் ஏறுதல்
தேங்காய் துருவுதல்
தட்டாங்கல்
பல்லாங்குழி
பாட்டி பேத்தி
அல்லி மல்லி தாமரை
வீடு கட்டல்
வளையல் விளையாட்டு
ஊஞ்சல்
சோளக்கதிர்
சிறுவீடு
குத்து விளையாட்டு
குண்டு விளையாட்டு
வண்டியுருட்டுதல்
பூச்சி விளையாட்டு
மரங்கொத்தி (விளையாட்டு)

தமிழர்களின் உள்ளக(indoor) விளையாட்டுகள்

தாயக் கட்டை
சொக்கட்டான்
கொக்கான்
பல்லாங்குழி
ஆடும் புலியும்
பாம்பும் ஏணியும்
பாண்டி
பம்பரம்
ஆடுபுலி ஆட்டம்
மூன்றுகல் ஆட்டம்
செப்புசாமான்
உப்புத் தூக்கல்
கூட்டாஞ்சோறாக்கல்
தத்தைக்கா..
சங்கு சக்கரம்
பருப்புக்கட
கிச்சு கிச்சு தாம்பலம்
ஒத்தையா, ரெட்டையா/கைத் துடுப்பாட்டம்
கரகர வண்டி
கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்
சீதைப் பாண்டி
ஒருகுடம் தண்ணி ஊத்தி
குலைகுலையா முந்திரிக்காய்
கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை
நொண்டி

ஆடவர் விளையாட்டுகள்

ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன.

ஜல்லிக்கட்டு
பாரிவேட்டை
சிலம்பம்
புலிவேடம்
சடுகுடு
இளவட்டக்கல்
ஓட்டம்
இரட்டை மாட்டுப் பந்தயம்
மோடி விளையாட்டு
உரிமரம் ஏறுதல்
பானை உடைத்தல்
உறிப்பானை விளையாட்டு
சூதுதாயம்
வாய்ப்புநிலை விளையாட்டுகள்
அறிவுத் திறன் விளையாட்டுகள்

மகளிர் விளையாட்டுகள்

மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன.

தாயம்
பல்லாங்குழி
தட்டாங்கல்
மஞ்சள் நீர் தெளித்தல்

சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்

எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் சில நமக்கு பரிச்சயம் ஆனதே. ஆனால், இதில் பல பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். அந்த விளையாட்டுகள் குறித்து தினம் நமது தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தலத்தில் காண்போம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Special article of tamilian games

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X