நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை
3 -0 என இழந்து இருக்கிறது இந்திய அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 235 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்சை விளையாடி இந்திய அணி சுப்மன் கில் (90ரன்) மற்றும் ரிஷப் பந்த் (60 ரன்) ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் 263 ரன்கள் குவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க
STATS: Rohit Sharma and Virat Kohli’s nightmare New Zealand series with the bat — average of 15.16 and 15.50
இதனை தொடர்ந்து 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணிக்கு 147 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆவது பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான பங்களிப்பே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். காரணம் இந்திய அணியின் கேப்டன் ஆன ரோகித் சர்மா இந்த தொடரில் தொடரில் விளையாடிய 6 இன்னிங்சில் 91 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 52, சராசரி 15.16 மட்டுமே எடுத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 6 இன்னிங்சில்
93 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 70, சராசரி 15.50 மட்டுமே எடுத்துள்ளார். இது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடைசி போட்டி?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன், இதுதான் இந்திய அணியின் கடைசி ஹோம் கிரௌண்ட் போட்டி. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு பைனல்தான். பைனல் முடிந்தப் பிறகு இந்திய அணி சீனியர்கள் ரோகித், கோலி, அஸ்வின், ஜடேஜா போன்றவர்கள் ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதால், மும்பை வான்கடே பிட்ச்தான், சீனியர்களுக்கு கடைசி ஹோம் கிரௌண்ட் மேட்சாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.