நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இரண்டாவது ஆட்டம் நாளை கராச்சியில் நடைபெறவுள்ளது.
கேப்டன் பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கராச்சியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அருகில் இருந்து நீச்சல் குளத்தில் விழுந்து விடுகிறார். இதையடுத்து, சக வீரர்கள் குலுக்கி குலுக்கி சிரிக்கின்றனர்.
முழுமையாக நனைந்த உடம்புடன் நீச்சல் குளத்தில் மேலே ஏறி வந்து அலெக்ஸும் சிரிக்கிறார். இந்த வீடியோவை கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அலெக்ஸ் கேரி பெயரை குறிப்பிட்டு அதிக எண்ணிக்கையிலான ஸ்மைலி எமோஜிக்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.
கடைசியாக பாகிஸ்தானில் 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.
கோலி பேசிய வீடியோ… ஏமாற்றத்தில் பெங்களூரு ரசிகர்கள்…
ஐபிஎல் சீசன் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கப்போகும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்த முறை 10 அணிகள் களத்தில் உள்ளன. புதிதாக குஜராத், லக்னெள அணிகள் வருகின்றன.
பெங்களூரு அணிக்கு சென்ற ஐபிஎல் வரை கேப்டனாக பொறுப்பு வகித்த விராட் கோலி, இந்த முறை கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
ஆனால், வீரராக அணியில் நீடிக்கிறார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு யார் கேப்டன் என்ற ஊகம் வெகுநாட்களாக நீடித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரில் ஒருவர் கேப்டனாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களும் ஆவலுடன் புதிய கேப்டன் யார் என்பதை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு அணி தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் விராட் கோலி பேசுகிறார். அவர் கேப்டன் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் யார் என்பதை அந்த வீடியோவில் அவர் கூறியபோது வீடியோ வேகமாக சென்று முடிகிறது.
யார் கேப்டன் என்பதை அறிந்து கொள்ள நாளை வரை காத்திருக்குமாறு சர்ப்ரைஸ் வைத்துள்ளது பெங்களூரு அணி. நாளை பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் புதிய கேப்டன் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். விராட் கோலியே அதனை தெரிவிப்பார் என்றும் பெங்களூரு அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
“Renewed Energy. Excited for the IPL season. There’s an important news...” - Virat Kohli has a message for all of you RCB fans! 🗣
Location: Museum Cross Road, Church Street, Bengaluru
Date: 12.03.2022
Time: 12pm to 8pm#PlayBold #WeAreChallengers pic.twitter.com/o26eA2bOq3— Royal Challengers Bangalore (@RCBTweets) March 10, 2022
இதனால், ஆவலுடன் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வலை பயிற்சியில் சிக்ஸர் பறக்கவிட்ட இளம் வீரர்
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஆலோசனையை கேட்டு யு-19 அணி இளம் வீரர் ஹங்கர்கேகர் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலைப் பயிற்சியில் சிஸ்கர்களை பறக்கவிட்டு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைக்கிறார். இதுதொடர்பாக சிஎஸ்கே அணி யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எம்.எஸ்.தோனி அவருக்கு ஆலோசனை வழங்குவதை காண முடிகிறது. வலைப் பயிற்சியை காண சூரத் லால் பாய் மைதானத்துக்கு வந்த ரசிகர்களை நோக்கி புன்னகையும் செய்கிறார் தோனி.
ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை எடுக்க முயற்சி செய்தது. எனினும், ரூ.1.5 கோடிக்கு இவரை ஏலத்தில் எடுத்து தன்வசமாக்கியது சிஎஸ்கே.
இந்திய யு-19 அணி சமீபத்தில் உலகக் கோப்பை வென்றது. அந்த அணியில் முக்கிய பங்காற்றினார் ஹங்கர்கேகர். மார்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை மும்பை மைதானத்தில் எதிர்கொள்கிறது சிஎஸ்கே. நடப்பு சாம்பியனும் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுமான சிஎஸ்கே ஆட்டத்தை காண எல்லோ ஆர்மி தயாராக இருக்கிறது.
40 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு… வைரலாகும் சிஎஸ்கே கேப்டனின் வீடியோ!
இந்திய மகளிர் அணி கேப்டன் செய்த சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்ட பாக்., வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் இளம் வீரர் ஃபகீம் அஷ்ரஃப் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் இடம்பெற்ற ஃபகீம் கொரோனாவில் பாதிக்கப்பட்டார்.
இதனால், முதல் டெஸ்டில் விளையாட முடியவில்லை. இந்நிலையில், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்ற வந்ததால் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.