கிரிக்கெட் வரலாற்றில் ‘Switch Bowling’ என்று எதையாவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ஆனால், இப்படியொரு பவுலிங் முறையை அறிமுகம் செய்திருக்கிறார் இந்திய பவுலர் ஷிவா சிங். அதாவது, ஸ்பின் பந்து வீச்சாளரான அவர், பந்து வீச ஓடி வரும் போது, உடலை ஒரு சுற்று சுற்றி பந்தை வீசுகிறார்.
Advertisment
இப்படியொரு பந்து வீச்சு முறையை யாருமே இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார். உடனடியாக, அந்த பந்து நோ-பால் என்றும் அறிவித்துவிட்டார்.
காரணம், ஐசிசி விதிகளின் படி, பேட்ஸ்மேனை திசைத்திருப்பும் எந்தவொரு பவுலிங்கிற்கும் நோ-பால் கொடுக்கப்படும். அதன்படி, இந்த 360 டிகிரி பந்துவீச்சுக்கும் நோ-பால் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுபோன்று 360 டிகிரி சுழன்று பந்துவீசுவது தான் எப்போதும் இவரது பாணி என்றிருந்தால், ஐசிசி இதற்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் திடீரென ஒரு குறிப்பிட்ட பந்தை மட்டும் அப்படி வீசியதை கிரிக்கெட் விதிகள் ஏற்காது.
மேட்டர் பழையதாக இருந்தாலும், ஸ்விட்ச் பவுலிங் இன்றும் ஒரு வித்தியாசமான கான்செப்ட்டாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil