ஒரே டெஸ்ட் அணி 10 ஆண்டுகளாக... நம்ப முடிகிறதா? - இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்

விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,

1. என் நாடு என்னை பாதுகாக்குமா?

அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்த போலீஸ் ஒருவர், ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்காவை உலுக்கியது. நாடெங்கும் தற்போது ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் அமெரிக்க கொடியை என் நெஞ்சில் சுமக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் அது என்னை பாதுகாக்குமா என்பது தெரிய வேண்டும். எனது நாடு கறுப்பர்கள் வாழ அனுமதிக்குமா என்பது எனக்கு முதலில் தெரிய வேண்டும். என் நாட்டை காப்பதில் நான் பெருமை கொள்கிறேன். அதேபோல், என் நாடு என்னை காக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

2, இந்தியா மீது அப்துல் ரசாக் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த பாகிஸ்தான் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், “எங்களுக்கு சந்தேகமே இல்லை. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே, இங்கிலாந்துடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது. இதற்காக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே…. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!!

3. பாண்ட்யாவின் சிறந்த ஐபிஎல் லெவனாம்…

இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளை வைத்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறந்த லெவனை (11 பேர்) தேர்வு செய்துள்ளார்.

டெலிவி‌ஷன் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் நடந்த உரையாடலின்போது, ஹர்திக் பாண்ட்யா தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

கிறிஸ் கெய்ல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, சுனில் நரீன், ரஷித் கான், பும்ரா, மலிங்கா.

அப்புறம்… வீட்ல அண்ணி எப்படி இருக்காங்க ப்ரோ!?

4. ஒரே டெஸ்ட் அணி 10 ஆண்டுகளாக… நம்ப முடிகிறதா?

கிரிக்கெட்டில் டெஸ்ட் அணி வீரர்கள் மட்டும் அடிக்கடி மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். ஒரு போட்டியில் விளையாடிய அதே லெவன் அணி, அடுத்த போட்டியிலும் விளையாடுவது அரிதிலும் அரிது. குறைந்தபட்சம் ஒரு வீரரையாவது அணி நிர்வாகம் மாற்றும். 2018ம் ஆண்டு, சவுத்தாம்ப்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில், கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களை கோலி களமிறக்கினார். சரியாக, 39 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இப்படியொரு அபூர்வ நிகழ்வு நடந்தது.

ஆனால், ஒரு அணி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதே பிளேயிங் லெவனுடன் ஆடியுள்ள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆஃப் கோர்ஸ்… யூ ஷுட் பிலீவ் இட்!

1980 பிற்பகுதியில் இருந்து 1990 தொடக்கக் காலம் வரை, விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 11 போட்டிகளில் ஒரே ஆடும் லெவனுடன் ஆடியுள்ளது.

Image Credit: ESPN Cricinfo

Image Credit: ESPN Cricinfo

லெஜண்டுடா!!

5. ஹேப்பி பர்த்டே பென் ஸ்டோக்ஸ்

உலகக் கோப்பை 2019 தொடரின் ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’ பென் ஸ்டோக்ஸ் பிறந்தநாள் இன்று.

அண்ணன் அடித்தால் அடி, இடித்தால் இடி, மிதித்தால் மிதி….

6. ரசிகர்கள் ஏமாற்றம்

ஆகஸ்ட் 11 முதல் 16 வரை நடைபெறவிருந்த ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் தொடரை, கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு உலக பேட்மிண்டன் அமைப்பு BWF வியாழக்கிழமை ரத்து செய்தது.

ஐபிஎல்-லே நடக்குமான்னு தெரில… ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்

7. ரசிகர்கள் இன்றி….

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு, லா லிகா கால்பந்து தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. பூட்டப்பட்ட கதவுகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெறுகிறது. ரசிகர்களின் ஆரவாரம், கிளாஸ் மாஸ் என்கரேஜ்மென்ட் என்று எதுவும் இன்றி தொடங்கப் போகும் மிகப்பெரும் விளையாட்டு தொடர் இது. இந்நிலையில், பார்சிலோனா கிளப் கால்பந்து அணியின் ஃபார்வேர்ட் நட்சத்திர வீரர் லூயிஸ் சாரஸ் கூறுகையில், “ரசிகர்கள் இன்றி விளையாடுவதற்கு நாங்கள் எங்களை பழக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இது விசித்திரமாக இருக்கப் போகிறது” என்று கவலை ரேகை படர தெரிவித்துள்ளார்.

பரவால்ல ஜி… அட்லீஸ்ட் இதுவாவது நடக்குதே…. இங்க வீட்ல டார்ச்சர் தங்க மிடில… சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close