Advertisment

சஹா விவகாரத்தில் பிசிசிஐ கண்டனம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. மேலும் செய்திகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

author-image
WebDesk
New Update
சஹா விவகாரத்தில் பிசிசிஐ கண்டனம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. மேலும் செய்திகள்

‘7 இந்திய வீரர்களை வெஸ்ட் இண்டீசுக்குள்

Advertisment

நுழைய விடாமல் தடுத்த அதிகாரிகள்

19 வயதுக்குள்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய யு-19 அணி சென்றபோது கொரோனா தடுப்பூசி செலுத்தாத நமது வீரர்கள் 7 பேரை அந்நாட்டு அதிகாரிகள் நுழைய விடாமல் தடுத்ததாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இந்திய ஜூனியர் அணியின் மேலாளர் லோப்ஜாங் ஜி.டென்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீண்ட நேர விமான பயணமாக துபாயில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வழியாக வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட்ஆப் ஸ்பெயின் நகரை சென்றடைந்தோம். அங்கிருந்து கயானா கிளம்ப வேண்டி இருந்தது.

ஆனால் விமான நிலையத்தில் சோதனை நடத்திய குடியேற்ற அதிகாரிகள் அணியில் கொரோனா தடுப்பூசி போடாத வேகப்பந்து வீச்சாளர்கள் ரவிகுமார், பேட்ஸ்மேன் ரகுவன்ஷி உள்பட 7 வீரர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தினர். 

அவர்களது வயது பிரிவினருக்கு இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. அதனால் தான் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை.

திரும்பி செல்வதற்கு உடனடியாக விமானம் இல்லாததால் உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுவதற்கு எங்களுக்கு வசதியாக அமைந்தது. 

இதையடுத்து வீரர்களுடனே தங்குவது என்று முடிவு செய்தேன். விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நாங்கள் தங்கினோம். இந்த விவகாரத்தால் 24 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே பரிதவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு இந்திய அரசாங்கமும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தலையிட்ட பிறகுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வீரர்களுக்கு இது ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது.

உலக கோப்பை போட்டி தொடங்கிய போது இந்திய அணியில் பலர் கொரோனாவில் சிக்கினர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உரிய டாக்டரும் இல்லை. எங்களது பிசியோதெரபிஸ்ட் தான் எங்களை பாதிப்பில் இருந்து மீள உதவினார். இதற்கான நடைமுறைகள் எதுவும் சரியில்லை. அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையமும் (பயோபபுள்) திருப்திகரமாக இல்லை என்று அவர் கூறினார்.

பாக். அணியுடன் ஒருநாள் தொடர்: ஆஸி., அணியில் வார்னருக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 4-ஆம் தேதி தொடங்குகிறது. 

ஒரு நாள் போட்டிகள் மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2-ஆம் தேதியும், 20 ஓவர் போட்டி ஏப்ரல் 5-ஆம் தேதியும் நடக்கிறது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், கம்மின்ஸ், ஹேஸில்வுட் ஆகியோருக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இவர்கள் ஒரு நாள் போட்டிகளில் ஆடாவிட்டாலும் தங்களது ஒப்பந்த வீரர்கள் என்பதால் பாகிஸ்தான் தொடர் நிறைவடையும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படாது என்பதை ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெளிவுப்படுத்தியுள்ளார்.

 ஏப்ரல் 6-ஆம் தேதியில் இருந்து ஐ.பி.எல். அணித் தேர்வுக்கு தயாராக இருப்பார்கள்.

பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், ஜாசன் பெரேன்டோர்ப், அலெக்ஸ் கேரி, நாதன் எலிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மெக்டெர்மோட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம்ஜம்பா.

ஐ.பி.எல். கிரிக்கெட் எப்போது நடைபெறும் என்ற தேதியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தொடர் வெற்றி:

இந்தியா ஏமாற்றம்

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

அதேநேரம், தொடர்ந்து 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப் பயணத்தை தொடர்கிறது நியூசிலாந்து.

இந்திய அணியில் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி உள்பட 5 வீராங்கனைகள் நீக்கப்பட்டனர்.

நீண்ட தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்மிருதி மந்தனா திரும்பினார். ஆட்டம் தொடங்கும் முன்பே பலத்த மழை பெய்ததால் சுமார் 5 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இதனால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.



‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடி நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது.



இந்திய தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் 68 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் ஷபாலி வர்மா (0), யாஸ்திகா பாட்டியா (0) பூஜா வஸ்த்ராகர் (4 ரன்) ஸ்மிர்தி மந்தனா (13 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 52 ரன்களும் சேர்த்தார். எனினும், இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததை அடுத்து, இந்திய அணியின் வெற்றி வாப்பை மறைந்து போனது.

பிற வீராங்கனைகள் சொற்ப ரன்களிலும் ரன்களே எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 128 ரன்களில் ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து வீராங்கனை ஹேலி ஜென்சன், அமெலியா கெர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

கடைசி மற்றும் 5-ஆவது ஒரு நாள் ஆட்டம் குயீன்ஸ்டவுனில் வியாழக்கிழமை (பிப்.24) நடைபெறவுள்ளது.

ஐ.எஸ்.எல்.: மும்பை வெற்றி

மும்பை-ஈஸ்ட் பெங்கால் இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

8-ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இதில் மும்பை -ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியவில் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

இந்த நிலையில், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மும்பை அணி ஒரு கோல் அடித்தது. ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பிபின் சிங் ஒரு கோல் பதிவு செய்தார்.

இதையடுத்து ஈஸ்ட் பெங்கால் அணியால் கோல் பதிவு செய்ய முடியவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி ,4 டிரா, 5  தோல்வி என புள்ளி பட்டியயலில் 4  ஆவது இடத்திற்கு முன்னேறியது. .ஈஸ்ட் பெங்கால் அணி விளையாடிய 18 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,9 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஐதராபாத்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

செஸ் உலகில் பிரமிப்பான சாதனை… யார் இந்த பிரக்ஞானந்தா?

சஹாவுக்கு பத்திரிகையாளர் மிரட்டல்: பிசிசிஐ கண்டனம்

சஹாவுக்கு பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கண்டனம் தெரிவித்தது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட இலங்கை-இந்தியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரித்திமான் சஹா இடம் பெறவில்லை. 

இதையடுத்து அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அதை சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து  சாஹாவுக்கு எதிரான மிரட்டலுக்கு பிசிசிஐ கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் குறிப்பிட்ட பத்திரிக்கையாளருக்கு எதிராக பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதை ஆதரிக்கவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment