Sports news in tamil: 2020ம் ஆண்டு ஐ பி எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பாதி போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, இந்தியாவிற்காக விளையாடிய ஒரு வீரரிடம் சமூக வலை தளம் மூலம் நர்ஸ் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட தொடர்பு கொண்டுள்ளார். இதை அந்த வீரர் பி.சி.சி.ஐ - யின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் செய்துள்ளார்.
இதை விசாரித்த பி.சி.சி.ஐ - யின் ஊழல் தடுப்பு பிரிவு, "டெல்லியை சேர்ந்த அந்த பெண் நர்சாக பணி புரிகிறார். சமூக வலை தளம் மூலம் வீரரிடம் மூன்று ஆண்டுகளாக தொடர்பில் இருந்து உள்ளார். தாம் அவரின் பெரிய ரசிகை என கூறி வீரருடன் பேசி வந்துள்ளார். அந்த பெண்ணை தீர விசாரித்ததில் அவருக்கும் சூதாட்ட குழுவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிந்தது. வீரர் உள்ள அணியில் யார் யார் விளையாட உள்ளார்கள் போன்ற கேள்விகளை மட்டும் கேட்டுள்ளார். வீரர் கோபமான ஈமோஜியை பதிவிட்டு உள்ளார். அதற்கு அந்த பெண் அழும் ஈமோஜியை பதிவிட்டு விட்டு வீரருடன் பேசிய மெசஜ்களை டெலீட் செய்து உள்ளார்" என பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது போல மற்றுமொரு வீரரை சமூக வலை தளம் மூலமாக வேறு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த வீரர் புகார் செய்ததை தொடர்ந்து இந்த வீரரும் பி.சி.சி.ஐ - யின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் செய்துள்ளார்.இதுவே இந்த நிகழ்வு வெளி உலகிற்கு வர காரணமாகவும் அமைந்ததுள்ளது.
2013-ம் ஆண்டு நடந்த ஐ பி எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்ட பி.சி.சி.ஐ - யின் ஊழல் தடுப்பு பிரிவு, வீரர்களுக்கு ஆன்லைன் கருத்தரங்குகள் நடத்தியது. அதில் சமூக வலை தளங்களில் ரசிகர் என்றும், நலன் விரும்பி என்றும் கூறி தொந்தரவு செய்ப்பவர்களை எப்படி சமாளிப்பது என்றுவிரிவான அறிவுரையை வீரர்களுக்கு வழங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"