Sports news in tamil: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எம் சி ஜி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது. நான்காவது ஆட்ட நாளான இன்று, ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களும், வேக பந்து வீச்சாளர்களும் ஆஸ்திரேலிய அணியை கலங்கடித்து கொண்டு இருந்தனர்.
ஆட்டத்தின் 96 ஓவரில் ஜடேஜா வீசிய பந்தில் மிட்சல் ஸ்டார்க் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஸ்டார்க் ரிவியூ கேட்டு விட்டு பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அல்ட்ரா எட்ஜ் -ல் ஸ்டார்க் பந்தை அடிக்கவில்லை மாறாக அவருடைய காலில் தான் அடித்திருந்தது தெளிவாகவே தெரிந்தது. மற்றும் எல் பி டபிள்யூவில் அவுட் இருக்குமா எனவும் பார்க்கப்பட்டது. அதிலும் ஸ்டார்க் அவுட் என தென்படவில்லை. எனவே மூன்றாவது நடுவர் மிட்சல் ஸ்டார்க்கை மறுபடியும் பேட் செய்ய அழைத்தார். அதே வேளையில் இந்தியா ரிவியூ கேட்கும் வாய்ப்பை இழந்து இருந்தது. மிட்சல் ஸ்டார்க் கேட்ட ரிவியூக்காக மட்டுமே அவரின் அவுட் – யை மூன்றாவது நடுவர் மறு பரிசீலனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The double not out! Mitch Starc couldn’t believe his luck after a successful review! #OhWhatAFeeling @Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/IvDZ8OgB69
— cricket.com.au (@cricketcomau) December 29, 2020
பெவிலியனில் இருந்து ஆடுகளத்திற்குள் திரும்ப வந்த ஸ்டார்க்கை, மாற்று வீரராக
களத்தில் நின்று கொண்டிருந்த கே. எல். ராகுல் புன்னகை நிரம்பிய வார்த்தைகளுடன் வரவேற்றார். ஸ்டார்க்கும் புன்னகை நிரம்பிய முகத்துடன் களத்திற்குள் சென்றார்.
இந்திய பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்காத ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இந்தியாவிற்கு 70 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.