ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க போவதில்லை: ரோஜர் பெடரர்

Sports News In Tamil: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படுவதாக அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார்.

Roger Federer has decided not to play 2021 Australian Open - ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க போவதில்லை: ரோஜர் பெடரர்

Sports News In Tamil: 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று நோய் காரணமாக காலதாமதம் செய்யபட்டு வருகின்றது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ல் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜர் பெடரர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மிக நேர்த்தியான டென்னிஸ் வீரர். இவர் இதுவரை இங்கு நடந்த போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை பட்டத்தை தட்டி சென்றவர். முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படுவதால், அடுத்த ஆண்டு நடக்கும் தொடரில் கலந்து கொள்ள போவதில்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது

இது குறித்து அவரின் மேலாளர் டோனி கோட்ஸிக் கூறியது:

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ‘கிராண்ட் ஸ்லாம்’ தொடரில் விளையாடியபோது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை என்பதால், மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். சிகிச்சையில் இருந்து மீண்டு உடற்தகுதி பெறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும். மேலும் முழங்கால் காயம் மற்றும் உடற்தகுதியில் அவர் கவனம் செலுத்தியே வருகிறார். இதைப்பற்றி குழுவிலுள்ள அனைவரிடமும் பேசிய பிறகே இந்த முடிவிற்கு வந்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டார் என கூறியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் இயக்குனர் கிரேக் டைலி கூறியதாவது

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடக்கிறது. இந்த போட்டிகளில் ரோஜர் பெடரர் கலந்து கொள்ளாதது மிகுந்த வருத்ததையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அவர் நல்ல உடற்தகுதி பெற்று 2022-ம் ஆண்டு நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரோஜர் பெடரர் 1999 -ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார். இதில் ஆறு முறை பட்டம் பெற்றுள்ளார். 15 முறை அரை இறுதியோடும், ஒரு முறை கால் இறுதியோடும் வெளியேறியுள்ளார். கடந்தாண்டு நோவக் ஜோகோவிச்சுடன் நடந்த அரை இறுதி போட்டியில் தோல்வியை தழுவினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports news in tamil roger federer has decided not to play 2021 australian open

Next Story
2-வது இன்னிங்சிலும் திணறும் ஆஸ்திரேலியா : இந்தியா அபார பந்துவீச்சு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com