Sports news in tamil : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இந்தியன் லெஜண்ட்ஸ் அணி சார்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்தியாவில் இன்னும் கொரோனா தொற்று அச்சம் நீடித்து வருவதால், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முன்னாள் வீரர் சச்சினுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்ட போது, சச்சின் சுகாதார ஊழியரிடம் ப்ராங் செய்துள்ளார். மற்றும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் சச்சின் கொரோனா சோதனைக்கு தயாராக உள்ளார் என்பதை காட்டுகிறது. அப்போது ஒரு அலறலை சச்சின் வெளிப்படுத்துகிறார். பின்னர் சச்சின் சிரிக்கும் போது மருத்துவ ஊழியர்கள் ஆச்சரியமடைந்து ஒரு படி பின்வாங்குகிறார்கள். உடனே சச்சின், "நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்களா அல்லது நானா?" என்று ஊழியர்களிடம் கேட்கிறார்.
கொரோனா சோதனைக்கு பிறகு நேற்று செய்வாய் கிழமையன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சச்சின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், “நான் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன் மற்றும் 277 கோவிட் டெஸ்ட்கள் எடுத்துவிட்டேன். ஒரு சிறிய கலகலப்பை ஏற்படுத்தவே இதை செய்தேன். மற்றும் நாங்கள் விளையாடுவதற்கு எங்களுக்கு உதவி வரும் மருத்துவ நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முன்னாள் வீரர் சச்சின், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிராக நடக்கும் போட்டியில் விளையாட உள்ளார். மற்றும் கடந்த வாரம் பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியன் லெஜண்ட்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதோடு 110 ரன்கள் கொண்ட இலக்கை வெறும் 10.1 ஓவர்களிலேயே எட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil