Advertisment

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: போராடித் தோற்ற பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபனில் விளையாடிய பி.வி.சிந்து,  டென்மார்க்கின் டேன் மியா பிளிச்ஃபெல்ட்விடம்    21-16, 24-26,13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்

author-image
WebDesk
New Update
sports badminton thailand open pv sindhu lacked to finish - தாய்லாந்து டென்னிஸ்: போராடித் தோற்ற பி.வி.சிந்து

Sports News In Tamil: கொரோனா தொற்று காரணமாக நீண்ட இடைவேளைக்கு பின் தாய்லாந்து ஓபன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு கடுமையான சோதனைக்கு பின் தான் விளையாட அனுமதிக்கப் படுகின்றார்கள். இந்திய வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் கோவிட் - 19 சோதனைக்கு பின்னரே விளையாட உள்ளனர்.

இந்நிலையில் தாய்லாந்து ஓபனில் விளையாடிய பி.வி.சிந்து,  டென்மார்க்கின் டேன் மியா பிளிச்ஃபெல்ட்விடம்    21-16, 24-26,13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். 74 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் மியாவிற்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தார் சிந்து. இது அவர்  கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடியதை விட மிக சிறப்பாகவே இருந்தது.

இதே மியாவிடம் தான் 2019 -ம் ஆண்டு நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷில் சாய்னா நேவால் தோல்வி அடைந்திருந்தார். மியா ஆட்ட நுணுக்கம் தெரிந்த சிறந்த வீராங்கனை, அதோடு போட்டியை சீக்கிரமே முடிக்க வேண்டும் நோக்கில் விளையாட கூடியவர். இந்த போட்டியில் மியா மிக மோசமான தாக்குதலை தொடர்ந்தார். வழி நடத்த இருந்த இரண்டு பயிற்சியாளர்களும் கோவிட் - 19 தொற்று உறுதியானதால், சிந்துவிற்கு சில இடங்களில் அடி சறுக்கியது.

"இங்கிலாந்து போட்டிக்குப் பின்னர் இதுவே எனது முதல் சர்வதேச  போட்டி. இந்த போட்டிக்காக என்னை நன்றாகவே தயார் செய்திருந்தேன். இரண்டாவது செட்டில் போட்டியை முடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. மற்றும்  மூன்றாவது செட்டில் கூட 4-1 என்ற  நல்ல தொடக்கத்தை  கொடுத்தேன். எல்லா இடங்களையும் கவர் செய்து ஆடி விடலாம் என நினைத்ததால் , கவன சிதறல்கள் ஏற்பட்டது. இன்னும் ஆறு மாதங்களில் தொடங்க உள்ள உலக பேட்மிண்டன் சம்பியன்ஷில் மிக கவனத்தோடு விளையாடுவேன் " என்று சிந்து கூறியிருந்தார்.

"உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மறுபடியும் போட்டிகள் நடைபெற துவங்கியுள்ளன.சொந்த மண்ணில் ஆடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. பேட்மிண்டன் மைதானத்தில் மீண்டும் ரசிகர்களை காண்பது அனைவருக்கும் இன்பம் நிறைந்த ஒன்றாக உள்ளது" என்று கொரியா அணியின் பயிற்சியாளர் கிம் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Badminton Pv Sindhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment